வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்தினார். அவர்களுக்கு உத்வேகத்தை கொடுத்ததோடு, சைவ, அசைவ உணவுகளும் வழங்கப்பட்டது.

மாவட்டவாரியாக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை தி.மு.க. நடத்திய நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்களுக்கு ஒன்றிய வாரியாக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்த உத்தரவிட்டருந்தார்.

இந்த நிலையில்தான் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்சோதி தலைமையில் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாட்டை உப்புலியபுரம் ஒன்றியச் செயலாளர் அழகாபுரி எம்.செல்வராஜ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

அழகாபுரி எம்.செல்வராஜ்

இது பற்றி உப்பிலிபுரம் ஒன்றியத்தில் உள்ள மூத்த ரத்தத்தின் ரத்தங்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், தேர்தல் பணிகள் மற்றும் கட்சிப் பணிகளுக்காக ஒன்றியங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அப்படி பிரிக்கப்பட்டாலும், உப்பிலியபுரம் அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் தீவிரமாக களப்பணியாற்றுபவர் அழகாபுரி எம்.செல்வராஜ்தான். காரணம், உப்பிலியபுரம் பகுதியில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள்.

ஆனாலும், உடையார் சமூகத்தைச் சேர்ந்த அழகாபுரி எம்.செல்வராஜ் அனைத்து சமுதாயத்தினரையும் அரவனைத்து கட்சிப் பணியை ஆற்றி வருகிறார். கடந்த பத்தாண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியின் போது, கட்சிப் பாகுபாடின்றி அரசின் திட்டங்களை உப்பிலியபுரம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்தவர்.

தற்போது தி.மு.க. ஆட்சியில் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் கமிஷன்… கலெக்ஷன்… கரப்ஷன்… கனிமவளக் கொள்ளை… தலைவிரித்தாடுகிறது. இதனை கண்டறிய, ஒரு குழு அமைத்து தமிழக அரசு சோதனை செய்தாலே உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில்தான் அ.தி.மு.க. வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் இன்று 9ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்சோதி வந்து பார்வையிட்டார். அ.தி.மு.க. வாக்குச் சாவடி முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு மட்டன் பிரியானி, சிக்கன் பிரியானியை கொடுத்து அசத்தியிருக்கியார்கள். அதோடு, ஆளும் தி.மு.க. அரசு வாக்குசாவடியில் எப்படியெல்லாம் நடந்துகொள்ளும்… அதனை எப்படி ‘லாவகமாக’ தடுக்க வேண்டும் என்பது பற்றியும் வாக்குச் சாவடி பிரமுகர்களை தனித்தனியாக அழைத்து அறிவுரை வழங்கினார் அழகாபுரி எம்.செல்வராஜ்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘ஒரு கட்சியின் ஆணிவேரே ஒன்றியச் செயலாளர்கள்தான்…. எனவே, ஒவ்வொரு ஒன்றியத்திலும் வாக்குச்சாவடி பிரமுகர்கள் கூட்டம் நடத்தவேண்டும். அந்தக் கூட்டம் ‘மாஸாக’ இருக்கவேண்டும்’ என கட்டளையிட்டிருந்தார். அந்தக் கட்டளையை உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் அழகாபுரி எம்.செல்வராஜ் நிறைவேற்றியிருக்கிறார்’’ என்றனர்.

ஆக மொத்தத்தில் உப்பிலியபுரம் ஒன்றியத்தைப் போல், தமிழகம் முழுவதிலும் உள்ள அ.தி.மு.க. ஒ.செ.க்கள் களப்பணியாற்றினால், பாண்டிச்சேரி, தமிழகம் உள்பட 40 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal