விலைவாசி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் எதிரே மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டக்கிளை மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார்.
இதில், 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்திய வண்ணம் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதன் பின்னர், ஊர்வலமாக சென்று பெரியபாளையம் பஜார் வீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முற்றுகையிட முயன்றனர்.இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் 97 பெண்கள்,102 ஆண்கள் என மொத்தம் 199 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரையும் இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் பெரியபாளையத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal