Month: November 2025

தமிழகத்தில் தொடரும் கொலைகள்! ஆவேச எடப்பாடி பழனிசாமி!

ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சென்னை பெண் கவுன்சிலர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

த.வெ.க.விற்கு சின்னம்! தேர்தல் ஆணையத்தில் மனு!

ஆளும் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் த.வெ.க. வரும் தேர்தலில் 10 சின்னங்களை தேர்வு செய்து விண்ணப்பித்துள்ளனர். அதில் இருந்து சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது சின்னம்…

மருத்துவக் கல்லூரி அனுமதி! கோட்டை விட்ட அரசு! சாட்டையை சுழற்றிய Dr.சரவணன்!

‘‘இந்தியா முழுவதும் 6,850 மருத்துவ இடங்களுக்கு அனுமதி அளித்த போது தமிழக அரசு மருத்துவ கல்லூரிக்கு ஒரு இடத்தை கூட பெற்றுத்தர முடியவில்லை. அரசு மருத்துவமனைகளில் 12,000 மருத்துவர்கள் இல்லாத நிலைமை உள்ளது. இந்தியாவில் 4ஆம் இடத்தில் இருந்த சுகாதாரதுறை தற்போது…

தலைநகரில் தற்கொலைப் படை தாக்குதல்! டெல்லி போலீசார் தகவல்!

தலைநகர் டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என டெல்லி போலீசார் தெரிவித்திருப்பதுதான் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு – காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, போஸ்டர்களை ஒட்டிய டாக்டர் அடில் அகமது கைது…

2026-ல் போட்டியிட தயங்கும் அதிமுக சீனியர்கள்! காரணம் என்ன?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வில் சீனியர்கள் பல தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டியது போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் பலர் போட்டியிட தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள்…

நெல்லையை அடுத்து தூத்துக்குடியில் ‘அண்ணாமலை அன்புக் கூட்டம்’ உதயம்!

நெல்லை மாவட்டத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள் அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி, அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தச்…

செந்தில்பாலாஜி வழக்கு! அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சிறப்பு நீதிமன்ற விசாரணையில் முடிவெடுக்கும் வரை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை விசாரிக்கக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நவ.24-ம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

திமுக நகராட்சி தலைவரை வீழ்த்திய திமுக கவுன்சிலர்கள்!

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பு இல்லை என்ற பேச்சுகள் தொடரும் நிலையில், தி.மு.க.வில் உடன் பிறப்புக்களின் உள்குத்துகள் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. திமுக கவுன்சிலர்களுக்கு இந்த நடவடிக்கையில் அதிமுக கவுன்சிலர்களும் உதவி செய்துள்ளதாக…

கரூர் துயரம்! ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் – மின் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் 2 பேர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக்…

‘கள்ளஓட்டு போடமுடியாது என்பதால் எஸ்ஐஆரை எதிர்க்கிறது திமுக!’ விளாசிய எடப்பாடி!

“திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் எஸ்ஐஆர் என்றாலே அலறுகிறார்கள். தகுதியானவர்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போடமுடியாது என திமுகவினர் இதனை எதிர்க்கிறார்கள். தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எஸ்ஐஆரை ஆதரிக்கிறோம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…