Month: July 2025

ஆணவக் கொலைகள்! பூங்கோதையின் ‘ஆக்ரோஷ’ பதிவு!

தமிழகத்தில் ஆங்காங்கே இன்னும் நடக்கும் ஆணவக் கொலைகள்தான் அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்த நிலையில்தான் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட செய்தி, அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில், ‘‘பல…

1967, 1977ப் போல் 2026! விஜய் நம்பிக்கை! அதிர்ச்சியில் கழகங்கள்!

‘‘1967, 1977ல் நடந்த தேர்தல்களைப் போல 2026 சட்டமன்றத் தேர்தல் இருக்கப் போகிறது’’ தவெக தலைவர் விஜய் பேசியிருப்பதுதான் திராவிட கட்சிகளை அதிர வைத்திருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர்…

அண்ணா கனவை நனவாக்கிய முதல்வர்! பூங்கோதை ஆலடி அருணா பெருமிதம்!

‘‘ ‘உங்களுடன் ஸ்டாலின்’ ’’ திட்டம் மக்களிடம் செல்; அவர்களோடு வாழ்; அவர்களை நேசி என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப் பாதையில் நமது தமிழ்நாடு அரசு மக்களின் மீது கொண்டிருக்கும் அக்கறைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டுக்காக ‘‘உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தினை…

சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொலை மிரட்டல்! கம்யூனிஸ்ட் கண்டனம்!

‘‘நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்’’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு…

‘பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்கும் ப.சி.!’ அமித் ஷா ஆவேசம்!

‘‘பாகிஸ்தானுக்கு பா.சிதம்பரம் நற்சான்று வழங்க விரும்புகிறார்’’என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் ஆவேசமாக பேசினார். ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து மக்களவையில் அமித்ஷா பேசியதாவது: ‘‘ஆபரேஷன் மகாதேவில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் தான் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள்.…

தென்மாவட்டங்களில் செல்வாக்கை நிரூபிக்கும் எடப்பாடி!

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ்.ஸை முழுமையாக ஓரங்கட்டியபிறகு அ.தி.மு.க.விற்கு தென்மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை என்று பேசப்பட்டது. இதனை உடைத்தெறிந்து ‘தென்மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இருக்கிறது’ என்பதை நிரூபிக்கத் தயாராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் சென்று தனது செல்வாக்கை நிரூபித்த…

மத்திய அரசுக்கு கண்டனம்! ஓபிஎஸ் ‘தில்’ அறிக்கையின் பின்னணி?

தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பி.எஸ். நேரம் கேட்டும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசுக்கு அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ மழலையர்…

அமைச்சர் மா.சு. மீதான முறைகேடு வழக்கு! சுப்ரீம் கோர்ட் யோசனை!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் முறைகேடு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. ‘சிட்கோ‘ எனப்படும், சிறு தொழில்கள் மேம்பாட்டு கழக நடைமுறையின் கீழ், அதில் பணிபுரிந்த தொழிலாளி கர்ணன் என்பவருக்கு, கடந்த 1995ல் அரசு…

‘சிறைக்குள் சித்ரவதை’! கண்ணீர் சிந்திய ராஜேந்திர பாலாஜி!

‘நான் செத்தாலும் சாவேனே தவிர, ஒரு போதும் அ.தி.மு.க.வை காட்டிக் கொடுக்கமாட்டடேன்’ என அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராஜேந்திர பாலாஜி, தொண்டர்கள் முன் கண்ணீர் சிந்தினார். சிவகாசியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள்…

ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்! செல்வப்பெருந்தகை ‘பகீர்’!

‘‘பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது’’ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசியவர் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி ஐஏஎஸ் அகாடமி தொடங்க இருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்படும்…