ஒரு குவார்ட்டர் பாட்டிலை வாங்கி ஒருவர் குடிக்க அந்த பாட்டிலை முன்று முறை ஸ்கேன் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளதாக குமுறுகின்றனர்.
கடந்த ஒருவார காலமாக, சமூக ஊடகங்களில் “டாஸ்மாக் ” மதுபான சில்லறை விற்பனைப் பிரிவு பணியாளர்கள் போராட்டம் குறித்து சூடு பறக்க விவாதம் நடந்து வருகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் அவர்களை செல்லும் இடமெல்லாம் சந்தித்து திரும்பத் திரும்ப பேட்டியளித்து வருகிறார். மற்ற முன்னணி அமைச்சர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் குறித்து அரசியல் ரீதியாக விளக்கம் அளித்து வருகிறார்கள்.
என்னதான் நடக்கிறது டாஸ்மாக் நிர்வாகத்தில்? பணியாளர்கள் எதற்காக போராடுகிறார்கள்? ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர வேண்டும் என போராடுகிறார்களா? அல்லது கடந்த காலங்களில் சுயநல ஆதாயம் அடைந்தவர்கள் போராட்டத்தை தூண்டி வருகிறார்களா? இப்படி, வினாக்கள் அடுக்கடுக்காக எழுப்பப்பட்டு, அவரவர் கற்பனை வளத்துக்கு தக்கபடி விவாதிக்கப்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் நா.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ‘‘ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ 10 என கூடுதலாக வசூலித்தால், நாளொன்றுக்கு 30 கோடி பாட்டில்கள் விற்பனை ஆகிறது. அப்படியானால் 10 ஜ் 30 கோடி = என கால்குலேட்டரில் கணக்குப் போட்டு, பணியாளர்களை கொள்ளையர்களாக சித்தரித்து பேசுவதில் சிலர் “அறிவாசான் ” தகுதியை பெற்று திகழ்கிறார்கள் என ஏஐடியூசி கடுமையாக சாடியுள்ளது.

நவம்பர் 01 ஆம் தேதி முதல் மதுபான விலையுடன் , காலிப்பாட்டில் திரும்பப் பெறுவதற்கான தொகையான ரூ 10 சேர்த்து MRP விலை திருத்தி அச்சிடப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு 180 மில்லி மதுபானப் பாட்டில் விற்பனை விலை ரூ 170 உடன் காலிப் பாட்டில் திரும்பப் பெறுவதற்கான ரூ 10 சேர்த்து MRP விலை ரூ 180 என அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் மதுப்பாட்டில்களில் ஒட்டப்படுகின்றன.
இப்படி கடைகளுக்கு வந்து சேரும் மதுப்பாட்டிலை விற்பனையாளர், தனது கைவசம் உள்ள Scan செய்யும் கருவியில் முதலில் விஸிறி விலைக்கான ஸ்டிக்கரை Scan செய்ய வேண்டும்,
இதனைத் தொடர்ந்து திரும்ப வரும் காலிப்பாட்டில், டாஸ்மாக் கடைகளில் தான் வாங்கப்பட்டது என்பதை உறுதி செய்து கொள்ள, அதற்கான ஹாலோ கிராம் ஸ்டிக்கரை ஒருமுறை Scan செய்ய வேண்டும்.
பிறகு காலி பாட்டில்கள் திரும்ப பெறும் போதும் ஒருமுறை ஸ்கேன் செய்ய வேண்டும். ஆக ஒரு மதுபாட்டிலை மூன்று முறை Scan செய்ய வேண்டும்.
இப்படி மூன்று முறை ஸ்கேன் செய்ய, குறைந்த பட்சம் மூன்று ஸ்கேன் Device தேவையாகும் என இந்திய கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் ‘‘விற்பனை அதிகம் ஆகும் கடைகளுக்கு கூடுதல் ஸ்கேன் டிவைஸ் தேவை என பணியாளர்கள் உறுதியாக கூறி வருவதாகவும், ஆனால் பெரும்பாலான கடைகளில் இரண்டு டிவைஸ் மட்டும் உள்ளது’’ என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் நா.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
