‘பெரியார் அறிவலகம் திறந்து வைப்பதில் என்ன பெருமை. உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை’ என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘பெரியாரின் அறிவுலகமும்… மு.க.ஸ்டாலினின் பொறாமை புலம்பல்களும்’’ எனும் தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கதில்,

‘‘கோவை பெரியார் அறிவுலகத்தை தனது சொந்தப் பணத்தில் ஸ்டாலின் கட்டினாரா என்று கேள்வி எழுப்பும் அதிமேதாவிகளே…

கல்லணையை கட்டிய கரிகாலனும் சரி பெருவுடையார் கோயில் எழுப்பிய ராஜராஜ சோழனும் சரி அதனை அவர்கள் சொந்தப் பணத்தில் கட்டியதில்லை…

மக்களின் வரிப்பணத்தை அவர்கள் மக்களுக்காக எப்படி எதற்கு திட்டம் தீட்டி பயன்படுத்தினார்கள் என்பதை பொறுத்தே வரலாறு அவர்களை வரவு வைத்துக்கொள்கிறது…

இதெல்லாம் குபாபிஷேக அனுமதிச் சீட்டையே பிளாக்கில் விற்கும் அரைகுறைகளுக்குப் புரியாது… என்ன நாஞ்சொல்றது’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal