பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசை தென்றல்’ தேவா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. அவரின் திடீர் மறைவு சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல்கட்ட தகவலின்படி அவருக்கு உடல்நலக்குறைவு சூர்யா மருத்துவமனையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார் என்பது தெரியவந்துள்ளது. இன்று காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சுமார் 8.30க்கு சிகிச்சை பலனின்றி திடீரென காலமாகிவிட்டார்.

சென்னை மைலாப்பூரில் பிறந்த தேவா, தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மாட்டுக்கார மன்னர் என்ற படம் மூலம் 1986-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பிரசாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் பிரபலமடைந்த தேவா, சகோதரர் சந்திர போஸுடன் இணைந்து இசைக்குழுவை நடத்தி வந்தார். தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் என்றாலே தேவா என்ற நிலை இருந்தது. அந்த அளவுக்கு பிரபலமாக இருந்தார். இளையராஜா உள்ளிட்ட இசைமையப்பாளர்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவில் தேவா தனி இசை ராஜ்ஜியம் நடத்தி வந்தார்.

ரஜினியின் அண்ணாமலை, பாஷா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர். ரஜினியின் பெயர் அறிமுக பிஜிஎம்-ஐ உருவாக்கியவர் தேவா தான். கடைசியாக சாருகேசி படத்துக்கு இசை அமைத்தார். அண்மைக்காலமாக இசையமைக்கவில்லை என்றாலும், சில படங்களில் பின்னணி பாடலாராகவும், நடிகராகவும் நடித்தார்.

இந்த நிலையில் தான் அவருக்கு இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். கவிஞர் கண்ணதாசன் நினைவு நாளான இன்று தேவா உயிரிழந்திருக்கிறார்.

இவரது மறைவு திரையுலகத்தையும், இசையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal