தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுகவினர் அமளியில் ஈடுபட, சபாநாயகர் உத்தரவின் பெயர்கள் அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதன்பின் சில மணி நேரங்களுக்கு பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘‘ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மாறி மாறி பேசி அவை நேரம் வீணடிக்கப்படுகிறது.

10 மணி நேரம் அவை நடந்தால், 3 மணி நேரம் தான் மக்கள் பிரச்சனை பேசப்படுகிறது. எம்எல்ஏ-க்களின் அனைத்து கேள்விகளுக்கும் 3 அமைச்சர்கள் தான் பதில் சொல்கின்றனர். இதனால் எந்த பயனும் கிடையாது. எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது. அதேபோல் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் முதல்வர் பதில் அளிக்கவில்லை.

காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்று கூட சொல்லவில்லை. மதுரையில் நடந்த ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்கும் விஜய் பதில் அளிக்கவில்லை. தமிழ்நாட்டில் பொருளாதார குற்றங்கள் அதிகரித்துள்ளது. சாலை விபத்துக்களை தடுக்க எந்த நடவடிக்கையும் இருப்பதாக தெரியவில்லை. உங்கள் தனிப்பட்ட பிரச்சனையை மாறி மாறி பேசுகிறார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிபறி, போதைப்பொருள் விற்பனை எல்லாம் திடீரென நிறுத்த முடியாது என்கிறார். இதற்கு முதலில் தவெக அரசு பொறுப்பேற்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது என்று கம்யூனிஸ்ட் கட்சியினரே விமர்சிக்கின்றனர். இந்த 4 மாதங்களில் விலைவாசி உச்சத்தில் இருக்கிறது.

பருப்பு, எண்ணெய், சர்க்கரை, சமையல் மளிகை சாமான்கள் என்று அத்தனையும் விலை உயர்ந்துள்ளது. 4 மாதங்களில் தவெக ஆட்சியில் ரூ.34 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறது. கடன் வாங்கி தான் திட்டத்தை செயல்படுத்த கூடிய நிலையில் இருக்கிறார்கள். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால், ரூ.20 லட்சம் கோடியாக தமிழக கடன் இருக்கும். வருவாயை மேம்படுத்தாமல், கடன் வாங்கி ஏன் திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்.

மின்சார கட்டணம் 20% உயர்ந்திருக்கிறது. அதேபோல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 2 தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. தற்போது இடைத்தேர்தல் வந்ததற்கு காரணம் தவெகவின் குதிரை பேரம்தான். நிச்சயமாக 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் இது.. நிச்சயமாக அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி வெல்லும்’’ என்று தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal