தமிழக சட்டசபையில் நேற்று விஜய் பேசியதற்கு கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சிகளே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், ‘‘மக்களை தலைகுனிய வைத்துக்கொண்டிருக்கிறார் தமிழகத்தின் ‘விபத்து முதல்வர்’ என தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் விஜய்க்கு எதிராக ஆவேசமாக பதிவிட்டிருக்கிறார்!

‘‘#விபத்து…’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில்,

‘‘ உடல் மொழியால் கேலி செய்வது

சைகை காட்டுவது

“வாயில நல்லா வந்திடுங்கிறது

” நான் என்ன டேஷ்க்கு… ங்கிறது”

” வச்சு செஞ்சு விடுங்கங்கிறது”

” ஓடிடாதீங்கங்கிறது”

” சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்ங்கிறது”

இப்படி
ஒரு முதலமைச்சர் பொறுப்பை
முச்சந்தி சண்டியர் ரேஞ்சுக்கு கீழே தள்ளியிருப்பதன் மூலம்

” இவருக்கா ஓட்டுப் போட்டோம் என மக்களை வெட்கித் தலைகுனிய வைத்துக் கொண்டிருக்கிறார் தமிழகத்தின் 108 – விபத்து முதலமைச்சர்..!’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal