‘பிரதமராக இருந்த போது நரசிம்மராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார், நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என சொல்ல அமைச்சர் மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?’ என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மரிய வில்சனின் சகோதரர் மரியகுளோத்தின் வீடு புகுந்து அவரது தம்பி மனைவி கேர்லைன் கிளேட் என்பவரை மரிய வில்சன் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவானது. இது தொடர்பாக புதுவை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கை எதிர்த்து மனுதாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது இதையடுத்து இந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. சமரசத் தீர்வு மையத்தில் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இரு தரப்பினர் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று ஐகோர்ட்டில் வந்தது. அப்போது நீதிபதி ‘‘நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என சொல்ல அமைச்சர் மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா, பிரதமராக இருந்த போது நரசிம்மராவே நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார். அப்படியிருக்கும் போது இவர் ஆஜராவதில் என்ன பிரச்சனை?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal