த.வெ.க அமைச்சர்கள் சட்டசபையில் கர்மவீரர் காமராஜரை ‘காம’வீரர் காமராஜர் என்னும், மனமாந்த நன்றி என்பதற்கு பதிலாக ‘மன்மத’ நன்றி எனவும் பேசி வருவதுதான் சட்டமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாக தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில், ‘‘#விவேககுருவும் #பரமார்த்தசீடர்களும்’’ எனும் தலைப்பில்

ஒருவர்
கர்மவீரரை
காமவீரர்
என்கிறார்…

மற்றொருவர்
மனமார்ந்த
நன்றியை
மன்மத
நன்றியாக்குகிறார்…

நிதி
அமைச்சரோ
நாற்பதாயிரத்து நாற்பத்தி
பனிரெண்டு
என்கிறார்…

தொழிலாளர் நலத்துறை அமைச்சரோ
” ஒரு லட்சத்து
ஒரு கோடியே
நூறு கோடி”
என்கிறார்…

ஆஹா இப்படி
” மட்டி
மடையன்
பேதை
மிலேச்சன்
மூடன் என்கிற

மேற்படி
பரமார்த்த
சீடர்களின்

விவேக
குருவான
முதலமைச்சரோ
” ஐயாயிரத்து தொன்னூற்று முப்பத்திரண்டு
கோடி” என்கிறார்…

அது சரி
” இங்கிவரை
யாம் பெறவே
என்ன தவம்
செய்து விட்டோம்”
என்றே

புல்லரித்து
நிற்கிறது
இந்த
புறநானூற்று
தமிழகம்…

என்னநாஞ் #சொல்றது’’ என பதிவிட்டிருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal