டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு விவகாரம் முன் ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா பக்ஷி, ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
மேலும் அவர்கள் அளித்த தீர்ப்பில் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்க வேண்டும் . உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவின் வழிகாட்டுதல்களை அறிவுறுத்தல்களை செந்தில் பாலாஜி மீறுவாரேயானால் அப்போது அவரது முன்ஜாமினை நாங்கள் ரத்து செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
