தென் மண்டல கவுன்சில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள் சிடி நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகனும், சட்டத்துறை அமைச்சராக சி.டி.நிர்மல் குமாரும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு கமிட்டி அமைக்கப்பட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு அவ்வப்போது கூட்டும். இந்தக் கூட்டத்தில் தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், நிக்கோபார் தீவு ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும், தலைமைச் செயலர்களும் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்சனைகள், நதிநீர் பங்கீடு, போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற பொதுவான விவகாரங்கள் குறித்து விவாதித்து தீர்வு காண்பது.
இந்த தென் மண்டல் கவுன்சில் கூட்டத்தின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார். இந்த நிலையில் அவ்வபோது நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர்கள் கலந்து கொண்டு அண்டை மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனை தொடர்பாக பேசி திர்வு மேற்கொள்வர்கள்.
அந்த வகையில் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு, சமூக நலன், சிறுபான்மையினரின் பிரச்னைகள், எல்லைப் பாதுகாப்பு விவகாரங்கள், நதிநீர் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிப்பார்கள்.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், தென்மண்டல கவுன்சில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாகவும் அரசு தலைமைச் செயலாளர் சாய்குமார் கவுன்சிலில் உள்ளதாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
