கரூர் விஜய் பரப்புரை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக அரசு வேலை வழங்குவதற்கு ஒரு தரப்பில் ஆதரவும், அக்கட்சிக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகளே எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.

கரூரில் விஜய்யை பார்க்க வந்து உயிரிழந்த குடும்பத்தினர் 32 பேருக்கு அரசு பணி வழங்குவதற்கு தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. காரணம், சி.பி.ஐ. விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது அரசு பணி வழங்கக்கூடாது என்கிறார்கள். இந்த நிலையில்தான் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ, ‘‘அரசு பணியாளர் தேர்வாணையத்தை, அரசியல் பணி தேர்வாணையம் ஆக்கலாம்’’ என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்,

‘‘#அதானே

தன்னைக்
காணவந்து
நெரிசலில்
செத்தால்
அரசு உத்தியோகம்…

தன்னை வைத்து
சினிமா
எடுத்தவருக்கு
டெல்லி
பிரதிநிதி பதவி…

தன்னை போட்டோ
எடுத்தவருக்கு
பிலிம்
சிட்டியில்
பொறுப்பு…

பேசாம…

அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தைக்
கலைத்துவிட்டு

அதனை

அரசியல்
பணி தேர்வாணையம்
ஆக்கலாம்..

அப்படியே

கண் விழித்து
படித்தால்
எல்லாம்
கிடைக்காது…

என்னைக்
காண வந்து
மிதிபட்டு
மரித்தால் மட்டுமே
அரசாங்க
வேலை என்று
அறிவிப்பும்
செய்து
விடலாமே…!

என்னநாஞ்

சொல்றது’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal