சென்னை மாநகராட்சி நிதி நெருக்​கடி​யில் சிக்கி​யுள்​ளதை அடுத்​து, ரூ.700 கோடி மதிப்​பிலான புதிய உள்​கட்​டமைப்பு திட்​டங்​களுக்​கான டெண்​டர்​களை ரத்து செய்​துள்​ளது.

தமிழகத்​தில் புதிய அரசு பொறுப்​பேற்​றதை தொடர்ந்​து, மாநக​ராட்​சி​யின் செல​வினங்​களை முறைப்​படுத்​த​வும், திட்​ட​மிடலை மேம்​படுத்​த​வும் பல்​வேறு அதிரடி நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இதன் ஒரு பகு​தி​யாக, நிதி பற்​றாக்​குறையை சமாளிக்​க​வும், வரு​வாயைப் பெருக்​க​வும் சொத்​து​வரி மற்​றும் தொழில்​வரி ஆகிய​வற்றை முழு​மை​யாக வசூலிக்க மண்​டலம் மற்​றும் வார்டு வாரி​யாக சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. உரிமை​யாளர்​கள் தங்​களது வரி நிலு​வை​களை உடனடி​யாக செலுத்​தி, சட்ட நடவடிக்​கைகளைத் தவிர்க்க வேண்​டும் என்று கேட்​டுக்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே கடந்த வாரம் ரூ.284 கோடி மதிப்​பிலான நடை​பாதை திட்ட டெண்​டர்​களை ரத்து செய்த மாநக​ராட்​சி, தற்​போது செல​வு​களை மேலும் குறைக்​க​வும், புதிய உள்​கட்​டமைப்பு திட்​டங்​களை வகுக்​க​வும் ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்ட வேளச்​சேரி மேம்​பாலத் திட்​டம் உள்​ளிட்ட ரூ.600 முதல் ரூ.700 கோடி வரையி​லான டெண்​டர்​களை ரத்து செய்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இவை மறு ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. மேலும் ரூ.2,000 கோடி வரை​யில் ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு வழங்க வேண்​டிய நிலு​வைத் தொகையை முறைப்​படுத்​து​வதற்​கான தீவிர நடவடிக்​கை​களில் மாநக​ராட்சி ஈடு​பட்​டுள்​ள​தாக​வும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து மாநக​ராட்சி அதி​காரி​கள் தரப்பிலோ, ‘‘அ​திக மூலதனம் தேவைப்​படும் உள்​கட்​டமைப்பு திட்​டங்​கள் மட்​டுமே தற்​போது நிறுத்​திவைக்​கப்​பட்​டுள்​ளன. மாநக​ராட்​சி​யின் நிதி நிலைமை சீரடைந்த பிறகு, இந்​தத் திட்​டங்​கள் அனைத்​தும் மறு​பரிசீலனை செய்​யப்​பட்டு மீண்​டும் புதிய டெண்​டர்​கள் கோரப்​படும்.

அதே நேரத்​தில், பொது​மக்​களுக்​குப் பயன்​படு​வதோடு மாநக​ராட்​சிக்கு வரு​வாய் ஈட்​டித் தரும் திட்​டங்​களான மல்​டிலெவல் வாகன நிறுத்​து​மிடங்​கள் போன்ற பணி​கள் எந்​த​விதத் தடை​யுமின்றி வழக்​கம்​போல் தொடர்ந்து நடை​பெறும்​’’ என்றனர்.

ஆக மொத்தத்தில் தி.மு.க. ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal