நடிகர்கள் பலரும் ‘மக்களுக்கு சேவை’ செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றனர். இதில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை.

தமிழகம் முழுவதிலும் 1980ம் ஆண்டே ரசிகர் மன்றங்களை வைத்திருந்த விஜயகாந்தால் 2011ல் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பிடிக்க முடிந்தது. அதன் பிறகு அக்கட்சியும் பெயருக்குதான் இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சி ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் நாற்காலியைப் பிடித்து எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்திருக்கிறார் விஜய்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியல் களத்தில் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ஓட்டுக்கு காசு’ என்ற பிம்பத்தை முழுவதுமாக உடைத்தெரிந்ததுதான் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இந்த நிலையில்தான் பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் அண்ணாமலையும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறது. அடுத்து, நடிகர் ராகவா லாரன்ஸ் த.வெ.க. சார்பில் திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார். அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தது.

இந்த நிலையில்தான், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது பொது வாழ்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து புதிய மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் விஜயைப்போலவே ஒருசிலர், தனிக்கட்சி இயங்கும் கனவில் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், நீண்டகாலம் பாஜகவில் இருந்த அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி, தனி இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். ’இது நம்ம இயக்கம்’ (we the leaders) என்ற பெயரில் அவர் ஆரம்பித்துள்ள இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். அதேபோல் லதா ரஜினிகாந்தும் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது பொது வாழ்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை, நேற்று அறிவிப்பதாக இருந்தார். எதிர்பாராதவிதமாக இயக்குநர் பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அதுகுறித்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, அரசியலுக்குள் நுழைவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காணொளி ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில், அதுகுறித்த ஆலோசனைகளையும் கருத்துகளையும் அவர் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பெரிய அளவில் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஒரே எண்ணமாக இருந்தது என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அண்ணாமலை தொடங்கியுள்ள We The Leaders இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் இணைந்து பொது வாழ்க்கையில் தீவிரமாக களமிறங்குமார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal