முதன் முறையாக இந்திய அரசியல் வரலாற்றில் தலைமுறை மாற்றத்தை தமிழக அரசியல் களம் சந்தித்து வருகிறது. அரை நூற்றாண்டு காலமாக தி.மு.க., அ.தி.மு.க.வைச் சுற்றியே வந்த நகர்வுகள் தற்போது மாறியிருக்கின்றன!
பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை தனது புதிய அரசியல் இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசியலின் எதிர்காலம் “உதயநிதி ஸ்டாலின் Vs தளபதி விஜய் Vs கே.அண்ணாமலை” என்ற முக்கோணப் போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று இளம் தலைவர்களும் வெவ்வேறு சித்தாந்தங்கள், பின்னணிகள் மற்றும் அணுகுமுறைகளுடன் களமிறங்கியுள்ளனர். இவர்களின் வருகை தமிழக அரசியலை முழுமையாக மாற்றியமைக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின்!
திமுகவின் அடுத்த தலைமுறை முகமாகவும், தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் (48), கருணாநிதி – மு.க.ஸ்டாலின் பாரம்பரியத்தின் நேரடி வாரிசு. சமூக நீதி, மாநில சுயாட்சி மற்றும் ‘திராவிட மாடல்’ கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் இவர், ‘சனாதன ஒழிப்பு’ உள்ளிட்ட தீவிர நிலைப்பாடுகளை எடுத்து திராவிட அடையாளத்தை வலுப்படுத்தி வருகிறார். திமுகவின் வலுவான கட்சிக் கட்டமைப்பு, பாரம்பரிய வாக்கு வங்கி மற்றும் ஆட்சி அதிகாரம் ஆகியவை உதயநிதியின் மிகப் பெரிய பலம். இளைஞர்கள் மற்றும் தொண்டர்களுடன் எளிதில் பழகும் எதார்த்த அணுகுமுறை இவருக்கு கூடுதல் ஆதரவைப் பெற்றுத் தருகிறது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பாதுகாத்து, வாரிசு அரசியலை தொடரும் முக்கிய பிரதிநிதியாக உதயநிதி காணப்படுகிறார்.
முன்பு துணை முதல்வர், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் என அடுத்தடுத்த அரசியல் அனுபவங்களையும் பெற்றிருக்கிறார். தற்போது, இவரது பேச்சு தெளிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் அமைந்திருக்கிறது.
‘தளபதி’ விஜய்
சினிமா உலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்து அரசியலுக்கு வந்துள்ள தளபதி விஜய் (51), ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கொள்கையின் அடிப்படையில் மதச்சார்பற்ற சமூக நீதியை முன்வைக்கும் இவர், இடது-வலது சார்பற்ற மாற்று அரசியலை வலியுறுத்துகிறார். கோடிக்கணக்கான ரசிகர்கள், இளம் படை மற்றும் எந்த அரசியல் கறையும் இல்லாத ‘புதிய முகம்’ என்ற பிம்பம் விஜய்யின் மிகப்பெரிய பலம். அமைதியான ஆனால் திட்டமிட்ட நகர்வுகள் மூலம் சினிமா கவர்ச்சியைத் தாண்டி மக்கள் தலைவராக உருவெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். திராவிட சித்தாந்தத்திற்கும் தேசியவாதத்திற்கும் இடையிலான புதிய தளத்தை இவர் உருவாக்க முயல்கிறார். புதிய அரசியல் கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் வரலாற்று சாதனைகளை உடைத்தெறிந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர்தான் விஜய்!
அண்ணாமலை (‘எக்ஸ்’ ஐபிஎஸ்)
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை (41),’We Are The Leaders’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி தமிழக அரசியலில் புதிய அலையை உருவாக்கியுள்ளார். வாரிசு அரசியல் ஒழிப்பு, கூட்டுத் தலைமை மற்றும் திறமையாளர்களை முன்னிறுத்தும் ‘வளர்ந்த பாரதம்’ தொலைநோக்கை முன்வைக்கிறார். படித்த இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு, ஆக்ரோஷமான பேச்சு, ‘ஞிவிரி திவீறீமீs’ போன்ற ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை அண்ணாமலையின் பலம். “நிரந்தரத் தலைவர், நிரந்தர எம்எல்ஏ கிடையாது” என்ற முழக்கம் மரபு அரசியலுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
உதயநிதி – பாரம்பரிய திராவிட அரசியல், விஜய் – சினிமா செல்வாக்கு மற்றும் மாற்று அரசியல், அண்ணாமலை – ஊழல் எதிர்ப்பு மற்றும் புதிய தலைமுறை அரசியல் ஆகிய மூன்று வெவ்வேறு துருவங்கள் ஒரே காலகட்டத்தில் மோதுவது தமிழக அரசியலுக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும். எம்.ஜி.ஆர் – கலைஞர், ஜெயலலிதா – கலைஞர் என இருமுனைப் போட்டியைப் பார்த்த தமிழக மக்களுக்கு இனி வரும் தேர்தல்கள் த்ரில்லான முக்கோணப் போட்டியாக இருக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தளவில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும் அரசியல் கட்சியினரிடையே எழுந்திருக்கிறது.
