தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. VOTE VIBE மற்றும் JVC டைம்ஸ் நவ் நிறுவன கருத்துக் கணிப்புகளில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி அதிமுக கூட்டணி 128 முதல் 147 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, Vote Vibe நிறுவன கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி அதிமுக 114 முதல் 124 தொகுதிகளில் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக வந்துள்ளதால், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நிச்சயம் மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்த நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் வோட் வைஃப் நிறுவன கருத்துக் கணிப்புகளும் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன.

டைம்ஸ் நவ் நிறுவன கருத்துக் கணிப்பு அடிப்படையில்அதிமுக 114 முதல் 124 தொகுதிகளில் வெற்றி பெறும் ,திமுக 75 முதல் 95 தொகுகளில் வெற்றி பெறும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் 8 முதல் 15 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, வோட் வைப் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு அடிப்படையில், 103 முதல் 113 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ Peoples Pulse) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப்படி திமுக 125 தொகுதிகள் முதல் 145 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தவெக 18-24 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2-6 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்’ (chanakya strategies) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி திமுக 145-160 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 50-65 தொகுதிகளிலும், தவெக 13-18 தொகுதிகளிலும், மற்றவர்கள் 5-8 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மேட்ரிஸ்’ (Matrize) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக 122 -132 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 87-100 தொகுதிகளிலும், தவெக 10-12 தொகுதிகளிலும், மற்றவர்கள் 0-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன.

அசாம், கேரளா, புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்​டப்​பேர​வை​களுக்​கான தேர்​தல் ஒரே கட்​ட​மாக ஏப்​ரல் 9-ம் தேதி நடந்து முடிந்​தது. தமிழக சட்​டப்​பேர​வைக்கு ஒரே கட்​ட​மாக கடந்த 23-ம் தேதி தேர்​தல் முடிந்​தது.

மேற்​கு​வங்​கத்​தில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்றது. முதல்​கட்ட தேர்​தல் கடந்த 23-ம் தேதி நடந்து முடிந்த நிலையில், 2-ம் கட்ட தேர்​தல் இன்று நடைபெற்றது. இன்று மாலை 6 மணி​யுடன் தேர்​தல் முடிவுக்கு வந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்​நாட்​டில் 85.1% வாக்​கு​கள் பதி​வாகின. வாக்கு எண்​ணிக்​கை மே 4-ம்​ தேதி நடை​பெற உள்​ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal