மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக, 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 3.21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் வாக்குப்பதிவுக்காக 41,000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில்தான் மாலை 5 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் 89.99 சதவீதம் வாக்குப் பதிவாகியிருக்கிறது. அதாவது, 90 சதவீதத்தை வாக்குப் பதிவு நெருங்கியிருக்கிறது. இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது-
முன்னதாக, 294 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்டமாக, கடந்த 23ஆம் தேதி 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் இதுவரை இல்லாத வகையில் 93.19 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
