தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் மே 4-ம் தேதி வெளியாகவிருக்கும் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. அரசியல் களம் ஒருபுறம் பரபரப்பாக இருக்க, மறுபுறம் ஜோதிட உலகம் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ குறித்து அதிரடியான கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

“விஜய் அரியணை ஏறுவது உறுதி” எனப் பல ஜோதிட நிபுணர்கள் அடித்துச் சொல்லத் தொடங்கியுள்ளனர். தேர்தலுக்குப் பிந்தைய சில நம்பகமான சர்வேக்களின்படி, விஜய்யின் கட்சி சுமார் 15 முதல் 30 சதவீதம் வரையிலான வாக்குகளைக் கவர்ந்துள்ளதாகத் தெரிய வருகிறது. பாரம்பரியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றுக்கு இணையாகப் பல தொகுதிகளில் விஜய் கடும் போட்டியை வழங்கியுள்ளார். குறிப்பாக, சுமார் 100 தொகுதிகள் வரை தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல ஜோதிடர் ஷெல்வி, விஜய்யின் ஜாதகத்தை ஆய்வு செய்து ஒரு மிக முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். விஜய்யின் ஜாதகத்தில் தற்போது ‘நீச்சபங்க ராஜயோகம்’ மிக உச்சகட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஒருவரைச் சாதாரண நிலையில் இருந்து மிக உயர்ந்த அதிகாரப் பதவியில் அமர்த்தும் வலிமை இந்த யோகத்திற்கு உண்டு. சிலருக்கு இளமையிலேயே வரும் இந்த யோகம், ஒரு சிலருக்கு 52 வயதிற்குப் பிறகு அசுர பலத்தைத் தரும். தற்போது விஜய்க்கு அந்த அதிர்ஷ்டக் காலகட்டம் கனிந்துள்ளதாகக் கருதப்படுகிறது. அன்று நாடே எதிர்பார்க்காத ஒரு முடிவு வரப்போகிறது” என ஷெல்வி குறிப்பிட்டிருப்பது, விஜய்யே தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற பிம்பத்தை வலுவாக்கியுள்ளது.

மற்ற ஜோதிட நிபுணர்களின் கருத்துப்படி, மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது, விஜய்க்குச் சாதகமான கிரகப் பெயர்ச்சிகள் நடக்கின்றன. பதவி யோகத்தை உறுதிப்படுத்தும் கிரக நிலைகள் விஜய்க்குத் தற்போது மிக வலுவாக உள்ளன. மக்களிடம் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு (Charisma) ஜோதிட ரீதியாக ‘ஜன வசிய யோகம்’ எனக் கூறப்படுகிறது. இதுவே தேர்தல் களத்தில் வாக்குகளாக மாறியுள்ளது. விஜய்யின் வருகை வாக்குகளைப் பிரிப்பது மட்டுமல்லாமல், ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தையே எழுதும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

அரசியல் நோக்கர்கள் விஜய்யின் வருகை வாக்கு வங்கியைச் சிதைத்துள்ளதாகக் கருதினாலும், ஜோதிடர்களோ அது ‘புதிய உருவாக்கம்’ என்கிறார்கள். ஜோதிடக் கணிப்புகள் உண்மையானால், தமிழக அரசியலில் விஜய்யின் சகாப்தம் மே 4-ம் தேதி முதல் முறைப்படி தொடங்கும். சர்வேக்கள் சொல்லும் 100 தொகுதிகள் கிடைக்குமா? அல்லது ஜோதிடம் சொல்வது போல விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்வாரா? இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் இன்னும் சில தினங்களில் விடை தெரிந்துவிடும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal