மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிதகளில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. பொது​வாக அங்கு தேர்தலின்​போது வன்​முறைச் சம்​பவங்​கள் அதிகம் நிகழ்​வது வழக்​க​ம்.

ஆனால் இந்த முறை தேர்​தல் ஆணை​யம் விதி​களை மிகத் தீவிரமாக அமல்​படுத்​தத் தயா​ராகி வரு​கிறது. விதிகளை மீறினால் மறுதேர்தல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்​பாக, வாக்​குச்​சாவடி அதி​காரி​கள் மற்றும் தலைமை அதி​காரி​களுக்​குத் தேர்​தல் ஆணை​யம் தெளிவான அறி​வுறுத்​தலை வழங்கி உள்​ளது.

இந்த முறை முதன்​முறை​யாக, செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) வசதியுடன் கூடிய சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் வாக்​குச்​சாவடிகள் நேரலை​யாகக் கண்​காணிக்​கப்​படும். கேம​ராக்​கள் அணைக்கப்பட்​டாலோ அல்​லது சந்​தேகத்​துக்கு இட​மான நடவடிக்கைகள் கண்​டறியப்​பட்​டாலோ உடனடி​யாக மறு​ தேர்தலுக்கு உத்​தர​விடப்​படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal