தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய், இன்று தூத்துக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக நெல்லை வந்து, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். நெல்லை மக்களிடம் உரையாற்றிய அவர், உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.விஜய் பேசுகையில்,“என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்களே! உங்களுக்கு என் வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? உங்க மகன், உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க தோழன், உங்க நண்பன்… உங்க விஜய் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.
இந்நேரம் திமுகவிடம் முழு அதிகாரம் இருந்திருந்தா, ஸ்டாலின் சார் கையில் முழு பவர் இருந்திருந்தா, இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது ஒரு முட்டுக்கட்டையைப் போட்டு என்னை வரவிடாமல் செய்திருப்பார். ஆனால் இப்போது அவர் ஒரு அதிகாரம் இல்லாத முதல்வராக இருக்கிறார். அதனால்தான் கொஞ்சம் எளிதாக வர முடிந்தது என்று நினைக்கிறேன்.திமுக அரசு எங்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள், நெருக்கடிகள், அவதூறுகள் செய்தாலும், அதையெல்லாம் தாண்டி இங்கு வந்திருக்கிறேன்.
திமுக கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் வெளியில் தனித்தனியாக இருப்பதுபோல் தெரிந்தாலும், உள்ளுக்குள் இருவரும் ஒன்றுதான். இரு கூட்டணிகளுக்கும் ஒரே நோக்கம் — விஜய் உங்களுக்காக நல்லது செய்யவும், உங்களுடன் நிற்கவும் வரக்கூடாது என்பதுதான். ஏனென்றால், நான் வந்ததிலிருந்து அவர்கள் செய்துகொண்டிருந்த ஊழல்கள் எல்லாம் தடைப்பட்டுவிட்டன.
அதனால் என் மீது அவர்களுக்கு செம கோபம். மக்களும் ஏற்கனவே ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிட்டீர்கள். இந்தக் கூட்டணி கணக்கு, அந்தக் கணக்கு, arithmetic, mathematics எல்லாம் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. கல்லாப்பட்டி கூட்டணி என்று சேர்த்து வைத்த பணமும் இப்போது கலகலத்துப் போய் நிற்கிறது.
திமுக கூட்டணியில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் ஓட்டு போட மாட்டார்கள் போல இருக்கிறது. அதேபோல் பாஜக தலைமையிலான கூட்டணியின் நிலையும் இன்னும் மோசம். எனவே மக்களே, திமுகவின் நேரடி கூட்டணிக்கும் மறைமுக கூட்டணிக்கும் என் மீது கோபம். ஆனால் அந்தக் கோபத்துக்கு காரணம் என்ன தெரியுமா? அவர்கள் வீட்டுக்குள்ளேயே விசில் சத்தம் பலமாகக் கேட்கிறது.
இந்த 30-33 வருஷமாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும், ஒவ்வொரு மனசுக்குள்ளும் செல்ல நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். அதனால்தான் கட்சியை ஆரம்பித்து ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்றேன். இது அரசியலைத் தாண்டிய உறவு. இது பூர்வ ஜென்ம பந்தம். இது election அல்ல… இது emotion.நான் சந்தோஷப்பட்டால் மக்கள் சந்தோஷப்படுகிறார்கள். மக்கள் சந்தோஷப்பட்டால் நான் சந்தோஷப்படுகிறேன்.
எனக்கும் ஒன்று, மக்களுக்கும் ஒன்று. என் கண்ணு கலங்கும். எவ்வளவு அவதூறுகள், எவ்வளவு சோதனைகள், எவ்வளவு வேதனைகள் கொடுத்தாலும், திமுகவாலோ, பாஜகவாலோ, வேறு யாராலோ என்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது.ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விஜய் இருக்கும் வரைக்கும் என்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது. அதனால்தான் நான் முன்னமே சொன்னேன் 234 தொகுதியிலும் இந்த விஜய்தான் வேட்பாளர். ஏனென்றால் நம்ம வேட்பாளர்கள் டாட்டாவோ, பிர்லாவோ, அம்பானியோ, அதானியோ கிடையாது. நம்ம வீட்டில் இருக்கிறவரை, நம்ம குடும்பத்தில் இருக்கிறவரைதான் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

இந்தத் தேர்தல் சும்மா ஐந்து வருடத்துக்கு ஒரு முறை வரும் தேர்தல் அல்ல. இது ஐம்பது வருடத்துக்கு ஒரு முறை வரும் அதிசயத் தேர்தல். இந்த வாய்ப்பை நீங்கள் miss பண்ணிடாதீர்கள்.ஏப்ரல் 23-ஆம் தேதி, காலையில் சும்மா பக்காவா ரெடியாகி, வீட்டில் இருக்கும் சாமியை கும்பிட்டுவிட்டு, உங்கள் voter ID card-ஐ எடுத்துக்கொண்டு முதலில் போத்துக்கு போய் நின்று, விசில் சின்னத்துக்கு நேராக இருக்கும் button-ஐ அழுத்துங்கள்.இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். உங்களுக்கான தேர்தல்.நான் தன்னந்தனியாக வந்திருக்கிறேன்.
எல்லா வசதிகளையும் தூக்கி எறிந்துவிட்டு, உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். ஒரு நாளும் பொய் சொல்லி உங்களை ஏமாற்ற மாட்டேன்.இது இரு முனைப் போட்டி. ஒன்று தவெக , இன்னொன்று திமுக. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேணுமா? மக்களை நேசிக்கும் உங்கள் விஜய் வேணுமா? அவ்வளவுதான் இந்தத் தேர்தல்.
என் மக்களே… உங்க மகனுக்கு, உங்க அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு, உங்க பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். தயவுசெய்து விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்.இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக மாறட்டும்.நான் வருகிறேன். விசில் அடிக்க ரெடியா? Confident-ஆ இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.மீண்டும் சந்திக்கும் வரை நன்றி. வணக்கம்” என தெரிவித்தார். மேலும் நெல்லையில் பிரச்சாரம் முடிந்ததும், விஜய் தூத்துக்குடியில் சாலை மார்க்கமாக ரோடு ஷோ நடத்தவிருக்கிறார்.
