கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இலை துளிர்ந்து வருகிறது.

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கடம்பூர் ராஜூ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் டிடிவி தினகரன் அவர்களை 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நேரடியாக கருணாநிதி களத்தில் இறங்குகிறார். த.வெ.க. சார்பில் பாலசுப்பிரமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் பாண்டி ஆகியோர் களத்தில் இறங்குவதால், நான்குமுனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இது தவிர, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் வேட்பாளரை களத்தில் இறக்கியிருக்கிறார். நான்காவது முறையாக மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு!

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகமுறை வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்து, சமீபகாலமாக அ.தி.மு.க.வே அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது.

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் அனைத்து சமுதாய மக்களையும் அரவனைத்துச் செல்லக்கூடியவர் கடம்பூர் ராஜு! 2011 சட்டமன்றத் தேர்தலில் இருந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார் கடம்பூர் ராஜு! 2026ல் நான்காவது முறையாக களத்தில் இறங்கியிருக்கிறார்.

தி.மு.க. சார்பில் கூட்டணிக் கட்சியான வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்த முறை தி.மு.க.வே நேரடியாக களம் இறங்கியிருக்கிறது. இதனால் ம.தி.மு.க.வினர் உற்சாகமிழந்து காணப்படுகின்றனர். த.வெ.க., நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டாலும், இங்கு முந்திச் செல்வது கடம்பூர் ராஜுதான்.

கடந்த முறை அ.ம.மு.க.வின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டபோதே அவரை எதிர்த்து வெற்றி பெற்றவர் கடம்பூர் ராஜு. கோவில்பட்டியில் அ.ம.மு.க.விற்கு ஓரளவிற்கு வாக்கு வங்கி இருக்கிறது. இந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் அ.ம.மு.க. இடம் பெற்றிருப்பதால், கடம்பூர் ராஜுவின் வெற்றி சுலபமாகிறது.

எனவே, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான்காவது முறையாக இலை துளிரும் வாய்ப்பு இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal