தமிழகத்தில் ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டு இருந்தது. மகனுக்கு தான் சீட் வழங்கப்பட்டிருந்தாலும் கூட காந்தி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மகன் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத சூழலில், இன்றைய தினம் அமைச்சர் காந்தியே அங்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் ஆர் காந்தி. 80 வயதான இவருக்கு வயதைக் கருத்தில் கொண்டு திமுக தலைமை சீட் வழங்காமல் இருந்தது. அவருக்குப் பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டு இருந்தது.

மகனுக்கு தான் சீட் வழங்கப்பட்டிருந்தாலும் கூட காந்தி அதிருப்தியிலிருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவரது மகன் வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்தச் சூழலில் தான் ராணிப்பேட்டையில் திமுக வேட்பாளர் மாற்றப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மகனுக்குப் பதிலாக அமைச்சர் காந்தியே அங்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம்தான் பரபரப்புரையில் இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal