நேற்றை தினம் செம்மண் முறைகேடு வழக்கிலிருந்து பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சீகாமணி விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு ஜெகத்ரட்சகன் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில், தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் சொத்துக்களைப் பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த 2020-ஆம் ஆண்டு ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

சிங்கப்பூரில் உள்ள போலி நிறுவனங்கள் மூலம் சுமார் 42 கோடி ரூபாயும், இலங்கையில் 9 கோடி ரூபாயும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில் ஜெகத்ரட்சகன், அவரது மகன் மற்றும் மகள் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தற்போது அந்தச் சொத்து பறிமுதல் உத்தரவை உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதுவரை பழைய உத்தரவுகள் எதையும் கருத்தில் கொள்ளாமல் புதிய விசாரணையை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே விதிமீறல்களுக்காக சுமார் 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal