அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்து, முதற்கட்ட வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில்தான் தி.மு.க.வில் கூட்டணியில் நிறைய புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதற்கிடையே, இன்றும், நாளையும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகளை இறுதி செய்தவதில் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

எனவே, நாளைக்குள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துவிட்டு, நாளை மறுநாள் 27ம் தேதி மாலை தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal