சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யான பிரபல யூடியூபர் சவுக்கு சங்​கரை ஆதம்​பாக்​கம் மற்​றும் சைதாப்​பேட்டை போலீ​ஸார் இரு மோசடி வழக்​கு​களின் கீழ், கடந்த டிசம்பர் 13 அன்று கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

சவுக்கு சங்​கருக்கு இதய நோய் உள்​ளிட்ட மருத்​துவ ரீதி​யாக பல்​வேறு பிரச்​சினை​கள் இருப்​ப​தால் அவரை ஜாமீனில் விடுவிக்​கக்​கோரி, அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​தார். அந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், சவுக்கு சங்​கருக்கு மார்ச் 25-ம் தேதி (இன்று) வரை 3 மாதங்​களுக்கு இடைக்​கால ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், ஜாமீன் நிபந்​தனை​களை தளர்த்​தக்​கோரி சவுக்கு சங்​கர் தரப்​பிலும், வழக்​கின் விசா​ரணை அதி​காரி​களை மிரட்​டும் வகை​யில் தொடர்ந்து வீடியோக்​களை வெளி​யிட்டு வரு​வ​தால் சவுக்கு சங்​கரின் ஜாமீனை ரத்து செய்​யக்​கோரி, காவல்​துறை தரப்​பிலும் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்த மனுக்​களை ஏற்​க​னவே விசா​ரித்த நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எம்​.ஜோ​தி​ராமன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, சவுக்கு சங்​கருக்கு முழு உடல் மருத்​துவ பரிசோதனை செய்து அறிக்கை தாக்​கல் செய்ய ராஜீவ்​காந்தி மருத்​து​வ​மனை டீனுக்கு உத்​தர​விட்​டிருந்​தனர்.

மேலும், நிலு​வை​யில் உள்ள வழக்​கு​கள் தொடர்​பாக யாரைப் பற்​றி​யும் எந்த வீடியோ​வும் வெளி​யிடக்கூடாது என சவுக்கு சங்​கருக்​கும் அறி​வுறுத்​தி​யிருந்​தனர். இந்​நிலை​யில், இந்த வழக்கு இதே அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், ஜாமீன் நிபந்​தனை​களை தளர்த்​தக்​கோரி சவுக்கு சங்​கர் தொடர்ந்த வழக்கு மற்​றும் தனது மகனுக்கு மருத்​துவ சிகிச்சை கோரி அவரது தாயார் தொடர்ந்த வழக்​கு​களின் கோரிக்கை நிலைக்​கத்​தக்​கதல்ல எனக் கூறி, அவற்றை தள்​ளு​படி செய்​தனர்.

அப்​போது, அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் அரசு வழக்​கறிஞர் ஆர். முனியப்​ப​ராஜ், சவுக்கு சங்​கரின் ஜாமீன் மார்ச் 25-ம் தேதி (இன்​று)) முடிவடை​யும் நிலை​யில், அவர் சரணடை​யா​விட்​டால் அவரை கைது செய்ய அனு​ம​திக்க வேண்​டும் என கோரி​னார்.

அதற்கு நீதிப​தி​கள், ‘‘இந்த விவ​காரத்​தில் நாங்​கள் எந்த கருத்​தை​யும் தெரிவிக்​க​வில்​லை. சவுக்கு சங்​கர் ஜாமீன் முடிவடைந்த பிறகும் நீதி​மன்​றத்​தில் சரணடை​யா​விட்​டால் போலீ​ஸார் சட்​டப்​படி உரிய நடவடிக்கை எடுக்​கலாம்’’ என உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் அனு​மதி வழங்கி உத்​தர​விட்​டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal