‘தேர்தல் பலருக்கு (அ.தி.மு.க.) முயற்சி, சிலருக்கு (த.வெ.க.) பயிற்சி, தி.மு.க.வுக்கோ அது தமிழகத்தின் வளர்ச்சி’ என தனது வலைதளப் பக்கத்தில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் பதிவிட்டிருக்கிறார்.

‘‘சூரியப் புரட்சி!’’ எனும் தலைப்பில்,

‘‘தேர்தல் என்பது
பலருக்கு முயற்சி…

சிலருக்கு பயிற்சி…

திமுகவுக்கோ
அது
தமிழகத்தின் வளர்ச்சி…

தமிழ் மக்களுக்கான
மகிழ்ச்சி…

அதனால் தான்

எழுபத்தைந்து
ஆண்டுகால

பொது வாழ்வு புகழோடு

அண்ணாவும், கலைஞரும்

மடியிட்டு வளர்த்த…

மகோன்னத இயக்கம்

இன்றும் இளமை
குன்றா துடிப்போடு…

முத்துவேல்
கருணாநிதி
ஸ்டாலினின்
கம்பீர
மிடுக்கோடு…

களம் காணும்
தேர்தல்கள்
யாவிலும் அது
காண்கிறது
எழுச்சி…

திக்கெட்டும் கிழக்காக
திறமையே துடுப்பாக..

உலகாளும் தமிழாக
உருளுகிற புவியாக…

தீரா நதியாக
ஜதி போடுது

எங்கள்

திராவிட
மாடலின்
தொடர்ச்சி….

என்னநாஞ்

சொல்றது…’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal