தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர், டாக்டர் ராமதாஸ், சசிகலா அணி என 5 முனை போட்டி நிலவி வருகிறது.
திமுக கூட்டணியில் தேமுதிக முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு ஏற்கெனவே மாநிலங்களவை சீட் கொடுக்கப்பட்டு சுதீஷ் எம்பியாக தேர்வாகிவிட்டார்.
இந்த நிலையில் தேமுதிகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேமுதிகவால் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கட்சியான விசிகவுக்கும் குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேமுதிக 10-க்கும் மேற்பட்ட இடங்களை எதிர்பார்த்திருந்த நிலையில் அக்கட்சிக்கு 5 முதல் 7 வரை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது. தேமுதிக முரசு சின்னத்திலேயே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 19 ஆண்டுகளுக்குப் பிறகு தேமுதிக, திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வைகோவின் மதிமுகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தேமுதிகவிற்கு அதைவிடக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
தேமுதிகவுக்கு விருத்தாசலம், ரிஷிவந்தியம், மதுரை மத்தியம் அல்லது மேற்கு, ஆரணி அல்லது செய்யாறு, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு தொகுதி ஆகிய தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு என சொல்லப்படுகிறது.
தேமுதிகவுக்கு விருத்தாசலம், ரிஷிவந்தியம், மதுரை மத்தியம் அல்லது மேற்கு, ஆரணி அல்லது செய்யாறு, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு தொகுதி ஆகிய தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு என சொல்லப்படுகிறது.
தேமுதிக தொடங்கப்பட்ட 2005-ஆம் ஆண்டிலிருந்து அதன் வாக்கு வங்கி பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. குறிப்பாக 2011-க்குப் பிறகு அக்கட்சியின் வாக்கு சதவீதம் சரிவைச் சந்தித்து வருகிறது.
