ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த பல ஆண்டுகளாக திமுக சார்பில் எம்எல்ஏ இல்லாதது அந்த தொகுதி திமுகவினருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தமுறை மொடக்குறித்து தொகுதி தி.மு.க. வசமாகுமா? என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி,அந்தியூர், பெருந்துறை, பவாளி, கோபிசெட்டி பாளையம், பவானிசாகர் என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

இதில் தற்போது நிலவரப்படி ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, அந்தியூர் தொகுதிகளைத் தவிர மீதமுள்ள 5 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக எம்எல்ஏ,க்கள் உள்ளனர். இதில் கோபிசெட்டி பாளையம் அதிமுக எம்எல்ஏவாக இருந்து வந்த கே.ஏ.செங்கோட்டையன் சமீபத்தில் தவெகவில்இணைந்து விட்டார். அவர் தனது எம்எல்ஏ பதவி சில மாதங்களுக்கு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் தற்போது பாஜகவை சேர்ந்த டாக்டர் சி.சரஸ்வதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். 2021 சட்டமன்ற பொது தேர்தலில், திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தற்போது திமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ.க்கள் மற்றும் இன்னாள் எம்எல்ஏ என யாரும் இல்லை. இதனால் ஆளும் கட்சியாக இருந்தாலும் அந்த தொகுதிக்குட்பட்ட திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எந்த ஒரு பயனும் இல்லாமல் விரக்தியில் இருந்து வருகின்றனர்.

வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதிக்கு திமுக சார்பில் ஒரு நல்ல செல்வாக்கு மிக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் நன்கு அறிமுகம் உள்ள வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்து 25 ஆண்டுகால ஏக்கத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் திமுக தலைமை ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்த வேண்டுமென மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த நம்பிக்கையோடு, எதிர்பார்ப்போடு உள்ளனர்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட மூன்று பேர்கள் பெயர் அங்கு பரவலாக பேசப்படுகிறது. மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் சு.குணசேகரன், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்எல்டி. சச்சிதானந்தம் , தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்துக்குமார் இந்த மூன்று பேரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என உடன்பிறப்புகள் சிலரிடம் பேசினோம்.

இதில் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன் திமுக தொண்டர்களுக்கு ஆறுதலாகவும் மற்றும் தொகுதி முழுக்க களம் இறங்கி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அனைவருக்கும் கிடைக்க பெற்று உடன் பிறப்புகளிடம் நன் மதிப்பை பெற்றுள்ளார். ஏற்கனவே ஒருங்கிணைந்த ஒன்றிய செயலாளராக இருந்த போது அனைத்து பகுதிகளையும் நன்கு அறிந்து வைத்துள்ளார். அதே போல் தொகுதியில் அனைத்து இடங்களையும் நன்கு தெரிந்து வைத்துள்ளார். தற்போது இந்த தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவும் அளித்துள்ளார்.

மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளராக தற்போது இருந்து வரும் சு.குணசேகரன் 1982 -ம் ஆண்டு முதல் திமுகவில் இருந்து வருகிறார். 1986 முதல் 1991 வரை கிளைச் செயலாளராகவும், 1991 முதல் 96 வரை அவல்பூந்துறை பேரூர் செயலாளர் ஆகவும், 1997 முதல் இன்று வரை 27 ஆண்டுகளாக (தொடர்ந்து ஆறு முறை) மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளராகவும் குணசேகரன் இருந்து வருகிறார்.

1996 முதல் தொடர்ந்து அவல்பூந்துறை பேரூராட்சி தலைவராக மூன்று முறை வெற்றி பெற்று 15 ஆண்டுகள் பேரூராட்சி தலைவராக சிறப்பாக இவர் பணியாற்றியுள்ளார்.மேலும் ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் துணைத் தலைவர், இயக்குனர் என பல பொறுப்புகளையும் வகித்துள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டம், திமுக தலைவர் கருணாதிதி கைது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொடக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை இவர் திமுகவினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல அறிமுகத்தோடு இருப்பதோடு அனைவரிடமும் அன்பு பாராட்டி வருவது இவரது சிறப்பிற்கு ஒரு சான்று.

இவர் 1986 முதல் நடைபெற்ற சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில், திமுக தலைமையிடம் போட்டியிட விருப்பமுனு தாக்கல் செய்துள்ளார். அந்த வகையில் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலிலும் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட திமுக தலைமையிடம் குணசேகரன் தனது விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார்.

மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சு.குணசேகரன் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ள நிலையில், அவருக்கு திமுக தலைமை போட்டியிட வாய்ப்பு வழங்கினால் நிச்சயமாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திமுக உடன்பிறப்புகள் தெரிவித்து வருகின்றனர். இவர் மொடக்குறிச்சி தொகுதிக்குள் வசித்து வருவதால் பொதுமக்கள் எளிதில் இவரை சந்திக்க முடியும்’’ என்றனர்.

25 ஆண்டு கால உடன்பிறப்புக்களின் கனவை திமுக நிறைவேற்றுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal