மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரும்பாலையில் கடந்த 11ம் தேதி அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பா.சரவணன் அவர்கள்‌ அப்பகுதி அனைத்து வீடு தோறும் உள்ள இல்லத்தரசிகள்‌ பொது மக்கள் அனைவருக்கும் ஹேண்ட் பேக்குகள் பரிசு வழங்கினர்.

மேலும் சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் ஆகியவை சார்பில் கரும்பாலை சமுதாய கூடத்தில் நடத்தப்பட்ட இலவச பொது மருத்துவ முகாமை துவக்கி வைத்து, முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்ற பொதுமக்களுக்கு விலையின்றி மருந்து மாத்திரைகளையும் வழங்கினார்.

மேலும் பகுதி மக்களுக்கு சுமார் 1000 பேருக்கு சிக்கன் பிரியாணி உணவு வழங்கினார். முன்னதாக அப்பகுதியில் உள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றதோடு, கரும்பாலையின் அனைத்து வீதிகளுக்கும் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், அடுத்து அமைய உள்ள அதிமுக ஆட்சியில் அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உதவுவதாகவும் டாக்டர் பா.சரவணன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal