மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து குன்னம் ராமச்சந்திரனும் தி.மு.க.வில் இணைகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை புத்தாண்டு கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன. இநந்த நிலையில், அதிமுக எம்எல்ஏவான ஓபிஎஸ் ஆதரவாளர் இன்று காலை, சட்டமன்ற அலுவலகத்தில், சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும் அளித்தார்.

ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது வைத்திலிங்கமும் தி.மு.க.வில் இன்று இணைந்திருக்கிறார்.

ஓ.பி.எஸ்.ஸுடன குன்னம் ராமச்சந்திரன்….

தமிழக அரசியல் களத்தில் அரசியல் அனாதையாக இருந்து வருகிறார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ். அவரை அதிமுகவில் இணைக்க எடப்பாடி மறுத்து வரும் நிலையில், அவரை வேறு எந்தவொரு கட்சியும் சீண்டுவதாக இல்லை. இதனால், அவருடன் உள்ள ஆதரவாளர்கள், மாற்றுக்கட்சியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் பலரும் மாற்றுக்கட்சியில் ஐக்கியமான நிலையில், இன்று வைத்திலிங்கமும் திமுகவில் ஐக்கியமானார்.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவில் இடம்பெற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த நிலையில், அவரோடு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரும் திமுகவில் இணைய இருக்கின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal