அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் துணை முதல்வர் பதவி குறித்து அமித் ஷா பேசியிருக்கும் தகவல்கள் தற்போது கசிந்திருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இடையிலான ஜனவரி 11 அன்று டெல்லியில் நடந்த நள்ளிரவு சந்திப்பில் துணை முதல்வர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்குபெற ஆர்வம் கொண்டுள்ளது. 2026 தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக தலைமை இடமிருந்து இதற்கான உறுதிப்பாட்டை பாஜக கோரியுள்ளதுடன், வரவிருக்கும் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்துள்ளது.
அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியே இடையேயான நடந்த சந்திப்பில், ‘‘பாரதிய ஜனதா கட்சி, அதிமுக கூட்டணியில் அதிகாரப் பகிர்வையும், கூடுதல் இடங்களையும் கேட்டு வலியுறுத்தியுள்ளது. அதன்படி முதல்முறையாக துணை முதல்வர் பதவியை கேட்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் எங்களுக்கு அமைச்சர் பதவிகளும். துணை முதல்வர் பதவியும் வேண்டும் என்று அமித் ஷா கூறி உள்ளாராம். தமிழகத்தில் பாஜக சுமார் 54 சட்டமன்றத் தொகுதிகளைக் கேட்டாராம். 50 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என கூறிவிட்டாராம் அமித் ஷா அப்போதே எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்தாராம்.
அதன் பிறகு அமித்ஷா எடப்பாடி பழனிசாமியிடம், ‘‘நீங்கள் தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியுற்று வருவதை எதிர்க்கட்சியினரும், உங்கள் கட்சியினரும் விமர்சிப்பதை நீங்கள் உணர்கிறீர்களா? இல்லையா? இதுநாள் வரை உங்களது பலம், பலவீனத்தை உணர்ந்திருக்கிறீர்களா? நேற்று கட்சி ஆரம்பித்தாலும், தமிழகத்தில் மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்து வரும் நடிகரே, ‘ஆட்சியில் பங்கு… அதிகாரத்தில் பங்கு’ கொடுக்கத் தயாராக இருக்கிறார்.
தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவி வரும் காங்கிரஸ் கட்சியே தி.மு.க.விடம் ஆட்சியில் பங்கு கேட்டு வலியுறுத்தி வருகிறது. எனவே, இந்த முறை துணை முதல்வர் பதவியை நாங்கள் கூறும் நபருக்கு நீங்கள் கொடுத்தாகவேண்டும். மற்றதை நாங்கள் பார்த்துக்கெள்கிறோம். விரைவில் தொகுதிகளை முடிவு செய்து அந்தப் பட்டியலை தமிழகத்திற்கு பிரதமர் வருவதற்குள் கொடுத்துவிடுங்கள்’’ என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம்.
இதனால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்வதென்றே தெரியாமல் தலையசைத்து விட்டு வந்திருக்கிறார் என்கிறார்கள்.
