தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரி நாடாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் தேவைப்பட்டது. தனது நண்பர் மூலம் திருநெல்வேலியைச் சேர்ந்த பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரை அணுகினார். அப்போது, ரூ.35 கோடி கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்த ஹரி நாடார், அதற்குப் பிரதிபலனாக ரூ.70 லட்சத்தை தொழிலதிபரிடம் பெற்றுக் கொண்டார்.

ஆனால், கடன் பெற்றுத் தரவில்லை, வாங்கிய ரூ.70 லட்சத்தையும் அவர் திருப்பி தரவில்லை. இந்நிலையில், தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில் ரூ.70 லட்சம் மோசடி செய்தது உறுதியான நிலையில், ஹரி நாடார், உடந்தையாக இருந்த சேலத்தை சேர்ந்த பாபு ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal