2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி, அ.தி.மு.க. களத்திலேயே இல்லை என்று விஜய் கூறிவருகிறார். எதிர்காலத்தில் உதயநிதிக்கு போட்டியாக விஜய்தான் வருவார் என அரசியல் பார்வையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் விஜய்க்கும், உதயநிதிக்கும் உள்ள வேறுபாட்டை தி.மு.க. செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் ‘ரியலும்… ரீலும்…’ என்ற தலைப்பில் தனது வலைதளப் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

‘‘#ரீலும் ரியலும்’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ்,

‘‘பெரியாரும் அண்ணாவும் கட்டமைத்த திராவிட பூகோளத்தில்… கலைஞர் எனும் அறிவாலய பல்கலைக் கழகத்தில்..

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் ததும்பாத தன்னிகரில்லா தலைமையால் பட்டை தீட்டப்பட்ட பவள விழா வைரம் தான் உதயநிதி ஸ்டாலின் என்றால்…

முதிர்ச்சியும் பயிற்சியும் இல்லாது அவசரத்தில் வெளிப்பட்டு ஆட்டம் போடுகிற நிலக்கரித் துண்டு தான் விஜய்…

இது ரியலுக்கும் ரீலுக்குமான வேறுபாடு..!’’ என பதிவிட்டிருக்கிறார்.

இந்த பதிவுதான் உடன் பிறப்புக்களை உற்சாகத்திலும், த.வெ.க. தரப்பை எரிச்சலடையவும் வைத்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal