சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க டி20 தொடரில் சுப்மன் கில் மூன்று போட்டிகளில் விளையாடி வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 100 என்ற அளவில் தான் இருந்தது. அதனால். அவரை டி20 அணியை விட்டே நீக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வந்தன. இந்த நிலையில் தான் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் பிசிசிஐ அதிரடியாக அவரை நீக்கி உள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இந்த அணியில் யாரும்எதிர்பாராத விதமாக டி20 அணியின் துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் நீக்கப்பட்டார். அக்சர் பட்டேல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், சஞ்சு சாம்சன் துவக்க வீரராக விளையாடுவது உறுதியாகி இருக்கிறது.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் துவக்க வீரர்களாக இறங்குவார்கள். இஷான் கிஷன் மாற்று துவக்க வீரராகவும், மாற்று விக்கெட் கீப்பராகவும் இருப்பார். இஷான் கிஷன் நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் பெறாத நிலையில் ஆச்சரிய தேர்வாக இந்த அணியில் இடம் பெற்றுள்ளார்.
அடுத்த பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் ஆகியோர் உள்ளனர். ரிங்கு சிங் மாற்று வீரராக இருப்பார். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் ஆல் ரவுண்டராக அக்சர் பட்டேலும் பந்து வீசுவார். ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர் மாற்று பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள்.
