தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் தலைமையிலான தவெக கட்சி தங்களுடைய அரசியல் வேலைகளை தீவிரபடுத்த தொடங்கியுள்ளது. உதாரணமாக கரூர் சம்பவத்திற்கு பிறகு மக்களை மாவட்டங்காக சென்று சந்திக்காமல் இருந்த விஜய் டிசம்பர் 18-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தி மக்களை சந்தித்து பல விஷயங்களை பேசியதோடு ஆளும் கட்சியின் மீது சில விமர்சனங்களையும் முன் வைத்தார்.
ஈரோடை தொடர்ந்து அடுத்ததாக டிசம்பர் 28-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நடத்த விருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படியான சுழலில் இன்று 2026 தேர்தல் கூட்டணி குழு அமைப்பது தொடர்பாக தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் என்.ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அதற்கடுத்தக்கட்ட தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனங்கள் குறித்து பேசினார்.
கோவையில் பேசிய அவர் ““தவழும் குழந்தைகள் தான் பெரியவர் ஆவார்கள், பெரியவரான பின் தான் தன்னாட்சி நடத்துவார்கள். நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பது தேர்தல் முடிவு தீர்ப்பளிக்கும். பொங்கல் முடிந்ததற்குப் பிறகு, எங்களுடைய திருப்புமுனையை பார்த்து நாடே வியக்கும்.“ என்றும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
