அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்து பேசினார் செங்கோட்டையன்.

இதனையடுத்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை அதிரடியாக நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக முன்னாள் எம்பி சத்யபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட 14 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal