மத்திய அரசு விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், ‘எல்லோருக்கும் தழும்பு உடம்பில்தான் இருக்கும்… தி.மு.க.காரனுக்கு தழும்பில் உடம்பிருக்கும்’ எனவே எதைக் கண்டும் அஞ்சமாட்டார்கள் என பேசி உடன்பிறப்புக்களை உற்சாகப்படுத்தியவர் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்!

‘‘அமாவாசையின் ஆட்டத்தை முடிக்க இன்னும் ஆறு அமாவாசை பாக்கி இருக்கு என்பதே உண்மை’’ என எடப்பாடி பழனிசாமி¬யை தனக்கே உரிதான பாணியில் கவிதை நடையில் வெளுத்து வாங்கியிருக்கிறார் மருது அழகுராஜ்.

இது தொடர்பாக ‘‘#சூரியனும் # புழுதியும்’’ எனும் தலைப்பில் தனது வலைதளப்பக்கத்தில்,

‘‘தவளையை
தின்று விட்டு
மமதையில் குதிக்கும் பாம்புக்கு தெரியாது

தன்னைத் தூக்க
பருந்து
வருமென்று…

அதுபோல்
பங்காளிச் சண்டையில் இருந்து தப்பிக்க

அதிமுகவின் மூலப்
பத்திரத்தை
அமித்ஷாவின் காலடியில் மொத்தமாய்
அடகு
வைத்துவிட்டு

அபகரிப்பு பழனிச்சாமி
அவசியமில்லாமல்
திமுகவின் பி டீம் என்றெல்லாம்
பிதற்றுகிறார்..

வன்மத்தால்
வதந்தி வீசி
சூரியனை
விமர்சிக்கும்

எடப்பாடி
புழுதியின்
ஆட்டத்தை

முத்துவேல்
கருணாநிதி
ஸ்டாலின்

மொத்தமாக
முடித்து வைக்க
போகிறார் என்பது சத்தியம்..

ஆம்
அமாவாசையின்
ஆட்டத்தை
முடிக்க

இன்னும்
ஆறு அமாவாசை
பாக்கி
இருக்கு என்பதே
உண்மை…

மருது அழகுராஜ்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal