அ.தி.மு.க.விலிருந்து ஓ-பிஎஸ் பிரிந்தபோது, அவருக்கு அரசியல் ‘ஞானம்’ புகட்டிய ‘அரசியல் ஞானி’யை கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பேசியதாக தகவல்கள் வெளியானது. தற்போது, அவருடைய ஆலோசனைப் படி விஜய் நடந்து கொண்டதால் டெல்லியிலும் அவருக்கு ‘வெற்றி!!!??’ கிட்டியது என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் இந்த வழக்கில் மேற்கொண்டு ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை செய்ய முடியாது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் 8-வது நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்.ஐ.டி. முக்கியமான பல ஆதாரங்களை திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இனி அந்த குழு விசாரணையை நடத்த முடியாது. கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு கீழ் சென்றது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜகவுடன் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வரும் நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த உத்தரவிற்கு பின் விஜய் முக்கியமான போன் கால் ஒன்றை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. முதலில் விஜய் சார்பாக ஆதவ் அர்ஜுனாவிற்கு போன் சென்றுள்ளது. அதில் ‘‘வாழ்த்துக்கள்… நீங்கள் சொன்ன மாதிரியே செஞ்சிட்டீங்க.. டெல்லியில் போய் வழக்கை நடத்திக்காட்டுவேன் என்று கூறினீர்கள். அதன்படியே வழக்கை சிபிஐக்கு கொண்டு சென்றுவிட்டீர்கள்.
கடந்த 2 வாரங்களாக பார்க்க வேண்டியவர்களை பார்த்து செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டீர்கள். அது நல்லதுதான். சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள்’’ என்று பேசி உள்ளாராம். அதன்பின் சில நண்பர்களுக்கு போன் செய்த விஜய்.. ஆதவ் அர்ஜுனா சொன்னபடி செய்துவிட்டார் என்று பாராட்டி பேசி உள்ளாராம்.
நான் மோசமான சூழலில் இருந்த போது அருண் கைவிட்டுவிட்டார். புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி என்ன செய்வது என்ட்ரி தெரியாமல் ஸ்டன் ஆகிவிட்டார். ஆதவ் அர்ஜுனாதான் ஆதரவாக நின்றார். டெல்லி வரை சென்றார். அவரின் செயல் சிறப்பாக இருந்தது என்று ஆதவ் அர்ஜுனாவை பாராட்டி பேசி உள்ளாராம்.
முன்னதாக விஜய் அரசியல் ‘ஞானி’யிடம் தீவிரமாக ஆலோசனை செய்தார். 3 மணி நேரம் நடந்த ஆலோசனையில், ‘‘வழக்கு என்று வந்தால் திமுகவை தடுக்க முடியாது. திமுக லீகல் விங் தவெக கதையை முடித்துவிடும். அவர்களை என்னால் எதிர்க்க முடியாது. நீங்கள்தான் உதவ வேண்டும். டெல்லி உதவியை நீங்கள்தான் பெற்று தர வேண்டும். அதை எதிர்கொள்ள ஆலோசனை தேவை. அதோடு சில சட்ட ரீதியிலான சப்போர்ட் தேவை. அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும் என்று அந்த அரசியல் ‘ஞானி’யிடம் விஜய் கேட்டு உள்ளாராம். விஜய் அதோடு.. நிலைமை கைமீறி சென்றுவிட்டது. பல விஷயங்கள் நினைத்தது மாதிரி இல்லை. பல உயிர்கள் போய்விட்டது. இதற்கு நீங்கள்தான் அரசியல் ரீதியாக உதவி செய்ய வேண்டும் என்று அந்த ‘ஞானி’யிடம் விஜய் கேட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைக்கு ஓ.பி.எஸ்.ஸின் நிலையை விஜய் நினைத்துப் பார்க்கவேண்டும் என்கிறார்கள் த.வெ.க.வில் உள்ள நிர்வாகிகளே..?
