‘‘41 பேர் உயிரிழந்த கரூர் சம்பவத்திற்கு நீதி கிடைக்க பாஜக எம்பிக்கள் குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து விஜய் இணைந்து செயல்பட வேண்டும்’’ தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக நேரில் கேட்டறிய, முழுமையாக கள ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிய தமிழகம் வந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி என்.டி.ஏ சார்பில் குழு பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையிலான எட்டு பேர் கொண்ட என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்கள் உண்மை அறியும் குழுவை தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் சந்தித்துப் பேச வேண்டும். நீதி கிடைப்பதற்கு துணை நிற்க வேண்டும்.

ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நடந்து முடிந்த ஒட்டுமொத்த கோர சம்பவத்தின் சூத்திரதாரியாக திமுக அரசின் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இருந்தது என்பது உள்பட திமுக அரசின் மீது தமிழக அரசின் மீது வைக்கப்பட்ட வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்? மற்றும் 41 பேர் உயிரோட சம்பவத்தில் அரசியல் சதி உள்ளது மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் தலையிட்டுள்ளனர் என்கிற படு பயங்கரமான குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை, முழுமையான தகவல் விவரங்களை அளித்து உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான முழு முயற்சியை நடிகர் விஜய் எடுக்க வேண்டும்.

இந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம், மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது. இதே போல, தமிழக ஆளுநர் ஆர். என். ரவியும் விரிவான அறிக்கையை கேட்டார். இதனிடையே, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் நேற்று கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர், வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த சூழ்நிலையில் தமிழக வெற்றி கழக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தேசிய பாஜக கூட்டணி எம்பிக்களின் உண்மை அறியும் குழு இன்று கரூர் வேலுசாமிபுரத்தில் ஆய்வு செய்ய வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆலோசனைபடி 8 பேர் கொண்ட பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு ஹேமமாலினி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி,ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக மக்களுக்கு கரூர் 41 பேர் பலியான சம்பவம் குறித்த உண்மைகள் தெரிய வேண்டும்.சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு, காயமடைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய பாஜக முழுமையான விசாரணை மேற்கொள்ள உள்ளது. இந்த சம்பவத்தில் அரசியல் சதி உள்ளதா? தமிழக அரசின் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் நிர்வாக சீர்கேடுகள் தான் இதற்கு காரணமா?

தமிழக வெற்றி கழகத்தின் ஏற்பாடுகளில் குறையுள்ளதா உள்ளிட்ட அனைத்து விஷயங்களை பாஜக எம்பிக்கள் குழு ஆய்வு செய்து உண்மை விவரங்களை சேகரிக்க உள்ளது.

இந்தக் குழு கரூரில் கூட்ட நெரிசல் நடைபெற்ற பகுதியில் இன்று ஆய்வு செய்கிறது. கரூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நடந்த கோர சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரிக்க உள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, இந்த சம்பவம் தொடர்பான முழுமையான கள ஆய்வுகளை மேற்கொண்டு இது தொடர்பாக அறிக்கையை பாஜக தலைமைக்கு தாக்கல் செய்ய உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், தமிழக வெற்றி கழகம் அரசியல் சதி உள்ளது என்று கூறியுள்ள குற்றச்சாட்டின் உண்மை தனிமை குறித்தும் பாஜக முழுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.

கரூரில் 41வது பேர் உயிரிழந்த கோர சம்பவம் தொடர்பான உண்மை அறியும் தேசிய பாஜக குழுவை தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் சந்திக்க வேண்டும். அந்த குழுவினருக்கு தேர்தல் பிரச்சாரத்தின் இந்த கோர விபத்து ஏற்பட்ட போது, என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக களத்தில் நடந்த உண்மை நிலவரங்களை விஜய் அளிக்க வேண்டும்.

ஏனென்றால் களத்தில் அந்த கோர சம்பவம் நடந்த நடந்த விஷயங்களை நேரில் நின்று பார்த்தவர் மற்றும் இந்த நிகழ்ச்சியின் நடுநாயகமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக, முதல் சாட்சியாக அறியப்படுபவர் நடிகர் விஜய். பாஜக குழுவினர் மக்களிடம் விசாரணை நடத்தினாலும் தமிழக அரசு காவல்துறை, அதிகாரிகளும் கேட்டு தெரிந்து கொண்டாலும் நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழக கட்சியினர், நிர்வாகிகள் அளிக்கக்கூடிய தகவல்கள் செய்திகள், உண்மைகளை தெளிவாக எடுத்து கூறக்கூடியதாக கருதப்படுவதால், நடிகர் விஜய் உடனடியாக, தேசிய பாஜக கரூர் சம்பவம் உண்மை அறியும் குழுவினரை தன்னுடைய நிர்வாகிகளுடன் சந்தித்து இது சம்பந்தமாக தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

இன்றைக்கு தமிழகத்தில் மக்கள் விரோத, சட்டங்களை மதிக்காத கொடிய ஆட்சி நடக்கிறது.தமிழக மக்கள் இன்றைக்கு திமுக ஆட்சிக்கு எதிராக பேசினால், கருத்து தெரிவித்தால், உண்மைகளை வெளிப்படுத்தினால், தமிழக அரசின் ஏவல் துறையாக விளங்கும் காவல் துறையால் வழக்குகள் தொடுக்கப்படலாம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக படுகொலைகள் நடக்கும் தமிழகத்தில் தாங்களும் கொல்லப்படலாம் , மிரட்டப்படலாம் என்ற அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் உண்மைகளை பேசுவதற்கு கரூர் நகர மக்கள் தயக்கம் காட்டுவார்கள்.

ஆனால் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்க்கு அப்படி இல்லை. விஜய் திமுகவை எதிர்த்து தான் அரசியல் செய்கிறேன். திமுகவை வீழ்த்துவது என் லட்சியம் என்று கூறி அரசியல் செய்யும்பொழுது இந்த கோர சம்பவத்தில் 41 பேர் தன்னுடைய உயிரினும் மேலான கட்சித் தொண்டர்கள், உயிருக்கு உயிரான ரசிகர்கள், ஆதரவளித்த தமிழக மக்கள் உயிர் இழப்புக்கு காரணமான சம்பவத்தில் உண்மைகளை சொல்ல வேண்டியதும் உண்மைகளை விழிப்புணர் வேண்டியதும் வேண்டியதும் நடிகர் விஜய் அவருடைய மிக முக்கிய பொறுப்பும் தலையாயக் கடமை ஆகும்.

எனவே நடிகர் விஜய் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தேச நலனை மக்கள் நலனை தமிழக நடனை கருத்தில் கொண்டு தேசிய பாஜக அமைத்துள்ள உண்மை அறியும் குழுவுடன் இணைந்து கரூர் சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களை வெளிக்கொணர முழு முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக்கொள்கிறது’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal