‘ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி திறந்து மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சகவீத இட ஒதுக்கீடு மூலம் ஆண்டுக்கு 660 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்க செய்து இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் எடப்பாடியார்.
தமிழகத்தில் கடந்த 53 மாத திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட உருவாக்கவில்லை. தற்போது இந்தியா முழுவதும் 6,850 மருத்துவ இடங்கள் ஒதுக்கியதில் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒரு இடங்கள் கூட கூடுதலாக பெற முடியாத கையாளகாத ஸ்டாலின் அரசு உள்ளது. சுகாதாரத் துறையில் தமிழக அரசு முற்றிலும் தோல்வியாக உள்ளது என்பது சாட்சியாக உள்ளது’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் தி.மு.க. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் ஏராளமான அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி மருத்துவத்துறையில் ஒரு சகாப்தம் படைத்த அரசாக அம்மாவின் அரசு இருந்தது. குறிப்பாக இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளை எடுத்துக் கொண்டால் இதில் தமிழகம் 74 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளை கொண்டு முதலிடத்தில் உள்ளது .இதே போல கர்நாடகா 70 கல்லூரிகள், மராட்டியத்தில் 68 கல்லூரிகள், தெலுங்கானவில் 56 கல்லூரிகள் உள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளது கடந்த 10 ஆண்டு கால அம்மாவின் ஆட்சியில் மட்டும் 17 அரசு மருத்துவ கல்லூரி உருவாக்கப்பட்டது. குறிப்பாக ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 1,450 மருத்துவ இடங்களை எடப்பாடியார் பெற்று தந்தார். மேலும் மதுரையில் 223 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து பாரத பிரதமர் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவர் எடப்பாடியார்.அம்மாவின் ஆட்சியில் 36,000 மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
குறிப்பாக காங்கிரஸ் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வில் இருந்து காப்பாற்ற, அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பை நினைவாக்கும் வகையில் 7.5 சகவீத இட ஒதுக்கீட்டை எடப்பாடி னயார் கொண்டு வந்தார். இதன் மூலம் ஆண்டுக்கு 660 மாணவர்கள் மருத்துவப் படிப்பை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவ படிப்பு பெற்ற மாணவர்கள் எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில்போது தங்களின் நன்றியினை தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போது தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவோம் என்று ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் 53 மாதம் ஆகியும் இதுவரை ஒரு அரசு மருத்துவக் கல்லூரிகளை கூட ஸ்டாலின் திறக்கவில்லை, மேலும் ஏற்கனவே எடப்பாடியார் உருவாக்கி கொடுத்த அரசு மருத்துவக் கல்லூரிக்கு போதுமான நிர்வாக வசதி இல்லை, பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியவற்றை நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஏற்கனவே இது போன்ற குற்றச்சாட்டுகளால் கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்படவில்லை.
குறிப்பாக தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மூலம் 5,550 இடங்களும், இ.எஸ்.ஐ.மருத்துவக் கல்லூரி மூலம் 150 இடங்களும்,
21 தனியார் மருத்துவக் கல்லூரி மூலம் 3,400 மருத்துவ இடங்களும்,
3 பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மூலம் 450 இடங்களும், 20 அரசு பல் மருத்துவ கல்லூரி மூலம் 1,950 இடங்களும் என 11,000 மேற்பட்ட மருத்துவ இடங்கள் உள்ளது ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இருந்து வருகிறார்கள். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் போதுமான அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லை என்று தொடர்ந்து மத்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது அதைக் கூட சரி செய்ய முடியவில்லை.
தற்போது கூட மத்திய அரசு இந்தியா முழுவதும் 6,850 மருத்துவ இடங்களை அதிகரித்து உள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 350 இடங்களை அனுமதிக்கப்பட்டுள்ளது இதில் அரசு கல்லூரிக்கு எத்தனை இடங்கள் என்று ஆவலுடன் பார்த்தால் நமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அந்த 350 இடங்களும் தனியார் மருத்துவ கல்லூரிக்கு தான் இடம் கிடைத்துள்ளது.
தற்போது உளள மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை அடிப்படையில் 500 மருத்துவ இடங்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் தேசிய தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி மறுத்துள்ளது ஏனென்றால் அரசு மருத்துவக் கல்லூரியை முறையாக கட்டமைப்பை செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டாக தொடர்ந்து இருந்து வருகிறது. சுகாதாரத் துறையில் தமிழக அரசு முற்றிலும் தோல்வியாக உள்ளது என்பது சாட்சியாக உள்ளது
தமிழகத்தில 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் அவர்களால் 100 நாள் வேலை வாய்ப்பு சம்பளத்தை கூட பெற்றுத்தர முடிவில்லை. ஆனால் எடப்பாடியார் தான் மத்திய அரசிடம் வலியுறுத்தி 2,999 கோடியை பெற்றுத் தந்துள்ளார், தற்போது இந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு கூடுதலாக மருத்துவ இடங்கள் வேண்டும் என்று கோரிக்கை கூட வைக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது இது தமிழக மக்களுக்கு செய்த துரோகமாகும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் பாடத்தை மக்கள் புகட்டுவார்கள், மீண்டும் 2026 ஆண்டில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் நிச்சயம் மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு கூடுதல் இடங்களை பெற்று தருவார்’’ எனக் கூறினார்.