‘‘அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்று தான் அன்று மனம் திறந்து பேசினேன்’’ என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: ‘‘அண்ணா துரையின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அண்ணாதுரை பெயரால் அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கினார். ஜெயலலிதா அதனை கட்டிக் காத்து வளர்த்தார்.

அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில் தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன்.இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பது தான். மாற்றான் தோட்டத்திற்கு மனம் உண்டு. மறப்போம் மன்னிப்போம். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தோடு மனம் திறந்து பேசினேன். எனது பே ச்சுக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்து உள்ளது.

தொண்டர்கள் பொதுமக்கள் கருத்துகளை மனதில் கொண்டு புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக வலிமை பெறவும், 2026ல் வெற்றி பெறவும் எல்லோரும் உறுதுணையாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் வைக்கிறேன்’’ இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

‘‘எல்லோரையும் ஒருங்கிணைக்க பத்து நாட்கள் காலக்கெடு வைத்திருக்கிறேன். இல்லை யென்றால் இந்த மனநிலையில் இருப்போரை ஒருங்கிணைப்பேன்’’ என 10 நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். பின்னர் அவரிடம் கட்சி பொறுப்புகளை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் நாளை டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal