‘‘ஹரித்துவார் கோவிலுக்கு செல்கிறேன்’ என சொல்லிவிட்டு நேற்றிரவு அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியானது. இன்றைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் செங்கோட்டையன் சந்தித்திருக்கிறார்.
இந்த நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் நேற்று முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், சண்முகநாதன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதேபோன்று சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாஜலம், செல்வராஜ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் ராஜ்சத்யன் மற்றும் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
இன்றைய தினம், செங்கோட்டையனின் கோட்டையான (தொகுதி) கோபி செட்டிப் பாளையும் மற்றும் அந்தியூர் தொகுதி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் இருந்து வரும் செங்கோட்டையனுக்கு மேலும், அதிர்ச்சியைக் கொடுக்க காத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி!