வரும் 27ஆம் தேதி ராகுல்காந்தி தலைமையில் பிகாரில் நடைபெறும் யாத்திரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கலந்துகொள்கிறார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிகாரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ மேற்கொண்டுள்ள வருகிறார். இதில் புர்னியா மாவட்டத்தில் நடைபெற்ற இருசக்கர பேரணியில் ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்துகொண்டார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.
பிகாரின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற ராகுல் காந்தியும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் பலதரப்பட்ட மக்களை சந்தித்து ஆதரவை திரட்டினர். இந்நிலையில் புர்னியா மாவட்டத்திற்கு வந்தடைந்த ராகுல் காந்தி அங்கு பிகார் மாநில முன்னாள் முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுடன் இருசக்கர பேரணியில் கலந்து கொண்டார்.