‘தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுக்கும் நடவடிக்கைகளை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது’ என தமிழக பா.ஜ.க. சவால் விடுத்திருக்கிறது

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் பயணத்தை ஊழல் கொம்பன்களும், அரசியல் சகுனிகளும் தடுக்க முடியாது.

தமிழக பாஜகவின் திருநெல்வேலி முதல் பூத் கமிட்டி மாநாட்டில் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் ஆட்சியை ஒழிப்பேன் என்றவுடன் தமிழர்களால் உனக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் மக்கள் விரோத அரசியல் சகுனிகளின் அலறல் சத்தங்களும், ஊழல் அமைச்சர்களின் உளறல் பேச்சுகளும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா “வாக்கு திருட்டு போல திருக்குறளை வைத்து தமிழர் ஓட்டுகளை திருட முடியாது” என்று பிரதமரையும், திருக்குறளையும் திருவள்ளுவரையும் கொச்சைப்படுத்துவது போல் பாஜக மீதும் பிரதமர் மீதும் அவதூறு பிரச்சாரம் செய்யும் வகையில் தேர்தல் ஆதாயத்திற்காக, பேசி உள்ளதுஎ வெட்கக்கேடானது. எந்த கும்பனாலும் தமிழக மக்களின் இதயத்தில் இருந்து இருந்து பிரதமரை பிரிக்க முடியாது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழிக்கும் தமிழக மக்களுக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்கு ஈடு இணை இல்லாதது. தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல. தமிழ் மொழியின் புனிதத்தையும் தமிழின் தொன்மையும் வரலாற்றையும் பெருமையையும் புரிந்து உலகிற்கே மூத்த மொழி தமிழ் மொழி தான் என்று உலகெங்கும் தமிழ் இலக்கியத்தில் இருந்து சான்றுகளோடு பேசி வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தமிழக மக்களின் இதயத்தில் தமிழ் குடிமகனாய் வாழ்ந்து வரும் பிரதமர் மோடியை தொடர்ந்து கொச்சைப்படுத்தி அவதூறு பிரசாரம் செய்யும் ஆ ராசா மீது திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமித்ஷா ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது. “பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சரும் தமிழ்நாட்டில் ஓட்டு திருட வருகிறார்கள்” இன்று அரசியல் நாகரீகம் இன்றி மகாபாரதத்தில் கௌரவர் கூட்டம் அழிந்து போக காரணமாக இருந்த தீய எண்ணம் படைத்த அரசியல் சகுனி போல, இன்று திமுக கூட்டணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இந்திய பிரதமரையும் இந்திய உள்துறை அமைச்சரையும் ஓட்டு திருடர்கள் என்று பேசுவதை திமுக தலைவர் ஸ்டாலின் ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் மகாபாரதத்தில் கௌரவர்கள் கூட்டத்துக்கு ஏற்பட்ட நிலைதான் திமுக கூட்டணிக்கும் ஏற்படும்.

அதேபோல அமைச்சர் நேரு திமுகவிற்கு போட்டியே கிடையாது என்று கொக்கரித்துள்ளார். ஊழல் ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம்! என்று அமித்ஷா கூறியுள்ளார். உலகத்திலே ஊழல் நிறைந்த கட்சியும் ஆட்சியும் திமுக தான் என்பதை வலியோடு வேதனையோடு, தமிழகத்திற்கு லட்சக்கணக்கான கோடி திட்டங்கள் அளித்தும் மக்களை சென்றடைவில்லையே என்ற ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

எட்டு மாதங்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி போன்றவர்கள் இனி எதிர்காலத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இடம்பெற முடியாது. இடம்பெறக்கூடாது. ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஆட்சி செய்ய அதிகாரத்தை வழங்க முடியாது என்று 130 சட்ட திருத்த மசோதாவை குறிப்பிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன், யாரை காப்பாற்றுவதற்கு கருப்பு மசோதா என்று கூறுகிறார்? என்று தெளிவாக கேள்வியோடு குறிப்பிட்டு பேசினார்.

திமுக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் வலுவாக உள்ளது.

திமுக கூட்டணி கட்சிகளும், மிஷனரி நடிகர்களும், தங்களுடைய சுதந்திர நாட்டிற்காக ரத்தத்தை இழந்த இயக்கத்தின் சுற்றத்தினரிடம் வருமானம் பெற்று அரசியல் பிழைப்பு நடத்தும் செபாஸ்டின் சீமான் போன்ற பிரிவினைவாதிகளும் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தலாம் ஒழிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழிகாட்டுதலில் தமிழகத்தில், மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுடைய அரசியல் நெறியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை உயர்த்தி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும்’’ என்று கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal