அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது.
ஐ.ஓ.பி., சமரச தீர்வு மையத்துக்கு தலா ரூ.15 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரத்து செய்யப்பட்டது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் மோசடி எதுவும் நடைபெறவில்லை; அரசு அதிகாரிகள் சம்பந்தப்படவில்லை என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013ல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து பெற்ற ரூ.30 கோடி கடனை, வேறு நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதால் இழப்பு எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது.
