தமிழகத்தைப் பொறுத்தளவில் பா.ம.க. எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணி ஆட்சியில் இருக்கும். ஆனால், கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் அது நடக்காமல் போனது. ஆனால், வருகிற 2026ல் ‘பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சியமைக்கும்’ என டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பிரபல நாளிதழுக்கு டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டியில், ‘‘பாட்​டாளி மக்​கள் கட்சி இப்​போதும் வலிமை​யாகத் தான் இருக்​கிறது. இன்​னும் கேட்​டால், பாட்​டாளி மக்​கள் கட்​சி​யின் வலிமை அண்​மைக் காலங்​களில் அதி​கரித்​திருக்​கிறது. அண்​மை​யில் உழவர் பேரியக்​கத்​தின் மாநாட்டை திரு​வண்​ணா​மலை​யில் நடத்​தினோம். வெறும் 25 நாட்​களில் ஏற்​பாடு செய்​யப்​பட்ட அந்த மாநாட்​டில் 3 லட்​சத்​திற்​கும் அதி​க​மானோர் திரண்​டனர். அடுத்து பிப்​ர​வரி 23-ம் தேதி கும்​பகோணத்​தில் சோழ மண்டல சமய, சமு​தாய நல்​லிணக்க மாநாட்டை சிறப்பாக நடத்தினோம்.

மே 11-ம் நாள் சித்​திரை முழுநிலவு நாள் இளைஞர் பெரு​விழா​ நடை​பெறவுள்​ளது. அப்​போது பாட்​டாளி மக்​கள் கட்​சி​யின் முழு​மை​யான வலிமை தெரி​யும். தேர்​தல் முடிவு​களுக்கு பல்​வேறு காரணி​கள் உள்​ளன. 2026-ம் ஆண்டு தேர்​தலில் பாட்​டாளி மக்​கள் கட்சி அங்​கம் வகிக்​கும் கூட்​டணி அமோக வெற்றி பெற்று ஆட்​சி​யமைக்​கும். அது தான் உங்​கள் கேள்விக்கு நான் அளிக்​கும் பதிலாக இருக்​கும்’’ என்று கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal