தி.மு.க. அமைச்சர்களுடன் செல்லூர் ராஜு ரகசிய உறவில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களை அ.தி.மு.க.வினரே எழுப்பி வந்த நிலையில், சட்டசபையில் சபாநாயகர் பேசியதுதான், அந்த விவகாரத்தை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

‘‘செல்லூர் ராஜு கேட்டால் எந்த அமைச்சரும் செய்ய மாட்டோம்’’ என சொல்ல மாட்டார்கள் என சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு தொகுதியில் தாழ்ந்த நிலையில் உள்ள மின்கம்பிகளை மாற்ற பேரவையில் செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்தார். மதுரை மேற்கு தொகுதியில் 218 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது, 3 புதிய துணை மின்நிலையம் அமைய உள்ளது. தாழ்ந்த நிலையில் உள்ள மின்கம்பியை மாற்ற திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என செல்லூர் ராஜு கேள்விக்கு பதில் தெரிவிக்கப்பட்டது.

இதுதான் அரசியல் கமெடியோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal