ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சமுள்ள நிலையில், நேட்டோவிடமும் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பதை புடின் புரிந்துகொள்ள வேண்டும் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

உலக நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ரஷ்யா உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்தியபடி முன்னேறி வருகிறது. தலைநகர் கீவில் இன்று தாக்குதலை தொடங்கியுள்ளனர். ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி தருகிறது. நாட்டை காக்க நினைக்கும் குடிமக்களுக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

உக்ரைனில் இதுவரை 137 பொது மக்கள் மற்றும் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அறிவித்துள்ளனர். ரஷ்ய வீரர்கள் 800 பேர் இறந்திருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புடினின் அணுகுமுறை குறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லே டிரயன், ‘‘ உங்கள் வரலாற்றில் சந்தித்திராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என புடின் கூறியிருப்பது உக்ரைன் மோதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும் என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதே போல் அட்லாண்டிக் கூட்டணியும் (நேட்டோ) ஒரு அணுசக்தி கூட்டணி என்பதை புடினும் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal